கேரள எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்கை திரும்பப்பெற அனுமதி கோரி அம்மாநில அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டு கேரளா சட்டப்பேரவையில் அம்மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தற்போது ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்) 6 சட்டமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு, அங்கிருந்த பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தினர். இதுதொடர்பாக அவர்கள் மீது பொதுச்சொத்தை சேதப்படுத்தியது காரணமாக கிரிமினல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரிய […]