மும்பை : மும்பையில் உள்ள கோல்டன் டொபாக்கோ ஸ்டூடியோவில் ‘கிங்’ படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் ஷாருக்கான் ஒரு தீவிரமான ஆக்ஷன் காட்சியில் நடித்துக் கொண்டிருந்தபோது காயமடைந்தார். பின்னர் அவர் சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் நடிகர்கள் மற்றும் குழுவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் ஸ்டண்ட் செய்யும் போது அவருக்கு தசை கிழிந்து பலத்த காயம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவர்கள் அவருக்கு ஒரு மாத ஓய்வு அறிவுறுத்தியுள்ளனர். இதனால் ‘கிங்’ படத்தின் […]