படப்பிடிப்பில் ஆக்ஷன் காட்சியின்போது ஷாருக் கானுக்கு பலத்த காயம்.?

கிங் படப்பிடிப்பில் நடிகர் ஷாருக்கானுக்கு காயம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், காயத்தின் விவரங்களை படத்தின் தயாரிப்பாளர்கள் இன்னும் வெளியிடவில்லை.

Shah Rukh Khan injury

மும்பை : மும்பையில் உள்ள கோல்டன் டொபாக்கோ ஸ்டூடியோவில் ‘கிங்’ படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் ஷாருக்கான் ஒரு தீவிரமான ஆக்‌ஷன் காட்சியில் நடித்துக் கொண்டிருந்தபோது காயமடைந்தார். பின்னர் அவர் சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் நடிகர்கள் மற்றும் குழுவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் ஸ்டண்ட் செய்யும் போது அவருக்கு தசை கிழிந்து பலத்த காயம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவர்கள் அவருக்கு ஒரு மாத ஓய்வு அறிவுறுத்தியுள்ளனர். இதனால் ‘கிங்’ படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த செய்தி குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. ஷாருக்கானோ அல்லது படத்துடன் தொடர்புடைய குழுவினரோ இது குறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. மறுபக்கம் ‘கிங்’ படத்துடன் தொடர்புடைய ஒரு வட்டாரத்திடமிருந்து வெளியான தகவலின்படி, அவர்கள் இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

படப்பிடிப்பில் ‘யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது எல்லாம் பொய், உறுதிப்படுத்தாமல் மக்கள் எப்படி இதுபோன்ற விஷயங்களைப் பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை என்று அந்த வட்டாரம் கூறியதாக சொல்லப்படுகிறது. மேலும், ஷாருக்கானுடன் மூன்று பெரிய ஷெட்யூல்களை படமாக்கியுள்ளோம். இப்போது படப்பிடிப்பு வெளிநாட்டு இடங்களிலும், பின்னர் நவம்பர்-டிசம்பர் மாதங்களில் இந்தியாவிலும் நடைபெறும்” என்று ‘கிங்’ படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்