ஹத்ராஸ் பாலியல் குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிட வேண்டும் என இந்திய குடியரசு கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான இளம்பெண் கடந்த மாதம் 14-ம் தேதி புல் அறுத்துக் கொண்டிருந்தார். அப்போது, இளைஞர்கள் 4 பேர் அந்த இளம் பெண்ணை தூக்கிச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, கடுமையாக தாக்கியதாகவும், நாக்கை வெட்டியதாகவும் தெரிகிறது. பலத்த காயங்களுடன் கடந்த இரண்டு வாரங்களாக அந்த […]