NEET – PG தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இட ஒதுக்கீட்டில் வரும் 16 முதல் தங்கள் விண்ணப்பத்தில் திருத்தம் செய்துகொள்ளலாம் என NBE அறிவிப்பு. செப்டம்பர் 11-ம் தேதி நடைபெற உள்ள NEET – PG தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் 27% OBC பிரிவினர் அல்லது 10% EWS பிரிவினர் அகில இந்திய இட ஒதுக்கீட்டில் உரிமை கோர விரும்பினால், வரும் 16-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதிக்குள் தங்கள் விண்ணப்பத்தில் திருத்தம் செய்துகொள்ளலாம் என்று NBE (NATIONAL BOARD […]
பொறியியல் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள் இட ஒதுக்கீடு வழங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் பி.இ, பி.டெக் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் வினியோகம் இன்று தொடங்கியது. அதன்படி, https://tneaonline.org என்ற இணையதளத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொறியியல் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள் இட ஒதுக்கீடு வழங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இடஒதுக்கீடு வழங்க ஏதுவாக இட ஒதுக்கீடு வழங்க ஏதுவாக ஆன்லைன் […]
குரூப் 1 தேர்வில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கான 20% ஒதுக்கீட்டை வழங்க டிஎன்பிஎஸ்சிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. 2020 டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முடிவிலிருந்து ஒன்றாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% ஒதுக்கீடு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவையே பின்பற்ற வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். குரூப் 1 தேர்வு முடிவுகளை மாற்றி அமைத்து உத்தரவை பின்பற்றினால் அதிகாரிகள் நியமனம் செய்ய காலதாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என தமிழ்நாடு […]
மருத்துவ படிப்புகளில் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு 2.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து நாளை ஆலோசனை. மருத்துவபடிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மருத்துவ படிப்புகளில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 2.5% உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் நாளை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டமானதுசென்னை தலைமை செயலகத்தில் நாளை மாலை 4:30மணிக்கு நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வரும் 69% இட ஒதுக்கீட்டை காக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில், தமிழக மக்கள் உயர்வுக்கும், சமூகநீதி பாதுகாக்கும் அடிப்படையாக பின்பற்றக்கூடிய 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா சமூகத்துக்கு அளிக்கப்பட்ட இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்த […]
பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீடு அண்ணா பல்கலைக்கழகத்தில் அமலானது. அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுகலை உயிர் தொழில்நுட்பவியல் படிப்பில் 10% இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தை தொடந்து அண்ணா பல்கலைக்கழகத்திலும் 10% இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளது. எம்டெக் பயோடெக்னலாஜி பிரிவில் 10% இடஒதுக்கீடு மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்லையில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய கருணாஸ், தேவரினம் என்ற அரசாணை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று ஆவேசமாக பேசியுள்ளார். தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ் எம்எல்ஏ, நேற்று நெல்லையில் தேர்தல் பொதுக் கூட்டத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், 12 அம்ச கோரிக்கைகளில், மொழி மற்றும் தமிழ் இனம் சார்ந்த பிரதான 3 கோரிக்கைகள் உள்ளன. நாங்கள் அரசுக்கு வைக்கக்கூடிய கோரிக்கைகள், நீங்கள் எந்த சமுதாய மக்களுக்கு இடஒதுக்கீடுகளை கொடுத்தாலும், […]
மருத்துவப்படிப்பில் 10% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை அமல்படுத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திவ்யதர்ஷினி என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், புதுச்சேரி மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு தந்தால், நீட் தேர்வின் […]
அனைத்து வேலைகள், படிப்புகளுக்கும் இட ஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் , இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவின் துணை நிறுவனங்களில் அறிவியலாளர் பணியிடங்களுக்கான ஆள் தேர்வில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டிருக்கிறது.உயர்நிலை அறிவியலாளர் பணிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட மாட்டாது என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு சார்பில் விளக்கமளிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு, […]
தமிழ் வழியில் பயின்றோருக்கு டி.என்.பி.எஸ்.சி தேர்வில் 20% இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் ஒப்புதல் அளித்துள்ளார். தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு டி.என்.பி.சி தேர்வில் 20 சதவிகிதம் இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவிற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார். அரசுப்பணிகளில் தமிழ் வழியில் படித்தோருக்கான முன்னுரிமை இட ஒதுக்கீட்டு சட்டம் கடந்த 2010 ஆம் ஆண்டு தமிழக அரசால் கொண்டுவரப்பட்டது. அந்த சட்டத்தில் சில திருத்தங்கள் மட்டும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு செய்யப்பட்டது. ஆனால், […]
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இட ஒதுக்கீட்டிற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்த நிலையில் சென்னை கிண்டில் உள்ள ராஜ் பவனில் இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி.
7.5 % இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சகத்துக்கு திமுக எம்பிக்கள் கடிதம் எழுதியுள்ளனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அரசு இயற்றியது. இதனால் உடனடியாக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இதற்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.இதனால் ஆளுநரின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.ஆகவே 7.5% உள் ஒதுக்கீடு தொடர்பாக […]
அகில இந்திய மருத்துவப் படிப்பிற்கான ஒதுக்கீடு கலந்தாய்வு இன்று தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இருக்கும் மருத்துவக்கல்லூரிகளில் 15% அகிய இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் ஆனது நிகர்நிலை,மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கையை மத்திய சுகாதாரத்துறை சேவைக்களுக்கான தலைமை இயக்குநரகம் கலதாய்வால் நடத்தப்பட்டு வருக்கிறது. இதன்படி மருத்துவப்படிப்பில் அகில இந்திய ஒதுக்கீடு கலந்தாய்வு இன்று தொடங்குவதாகவும் மாணவ மாணவிகள் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப்படிப்பிற்கான அகில […]
மருத்துவப் படிப்பில் ஒ.பி.சி மாணவர்களுக்கு, நடப்பாண்டில் 50% இட ஒதுக்கீடு வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இட ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் சரியான முறையை பின்பற்றவில்லை என கூறி தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய இடஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50 % இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி திமுக, அதிமுக, பாமக, கம்யூனிஸ்ட்கள், மதிமுக, காங்கிரஸ், விசிக மற்றும் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம்,ஓபிசி பிரிவினருக்கு […]
7.5% இட ஒதுக்கீடு மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் வழங்க வலியுறுத்தி , திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. . 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது .இதனால் எதிர்க்கட்சிகள் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் வழங்க வலியுறுத்தி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன் ,மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சார்பில் […]
பாட்டாளி இளைஞர்களே, தனி இடஒதுக்கீட்டுப் போராட்டத்திற்கு இப்போதே தயாராக வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது நமது 40 ஆண்டு கால கோரிக்கை ஆகும். இதற்காக ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறோம்; எண்ணற்ற தியாகங்களை செய்து இருக்கிறோம்; 21 இன்னுயிர்களை இழந்திருக்கிறோம். ஆனால், தமிழ்நாட்டை கடந்த காலங்களில் ஆட்சி செய்தவர்களும், இப்போது ஆட்சி செய்பவர்களும் நமது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. […]
7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் விவகாரம் குறித்து கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை தமிழக அரசு இயற்றியது. இதனிடையே மருத்துவ இடங்களில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்து சட்டத்தை 2020-2021 ஆம் கல்வி ஆண்டிலே அமல்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில் , உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.அதில்,மருத்துவ படிப்பில் அரசு […]
7.5% உள் ஒதுக்கீடு தொடர்பாக ஆளுநருடன் 5 அமைச்சர்கள் சந்தித்துள்ளனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை தமிழக அரசு இயற்றியது. இதனிடையே மருத்துவ இடங்களில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்து சட்டத்தை 2020-2021 ஆம் கல்வி ஆண்டிலே அமல்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில் , உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.அதில்,மருத்துவ படிப்பில் அரசு பள்ளி […]
“7.5% இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் ஆளுநர் முடிவு வரும் வரை மருத்துவ கலந்தாய்வு தொடர்பாக எந்த முடிவும் வெளியிடப்படாது” என்று உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை கோரி மதுரையை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவரது வழக்கில்,அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ இடங்களில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்து சட்டத்தை 2020-2021 ஆம் கல்வி ஆண்டிலே அமல்படுத்த […]
இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கக் கூடாது என்ற தமிழக அரசின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சீனியாரிட்டி ஆகியவற்றுக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் சிறப்பு ஒதுக்கீடு ரோஸ்டர் முறையில் பின்பற்றப்பட்டு வந்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து, கடந்த 2015- ம் ஆண்டு உத்தரவிட்டது. அதனை உச்சநீதிமன்றம் உறுதிசெய்தது. அதற்கு மாற்றாக கடந்த 2016- ம் […]