தூத்துக்குடி : இன்று நாடு முழுவதும் விஜயதசமி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. விஜயதசமி நாளன்று கல்வி, புதிய தொழில்கள் என நல்லவற்றை துவங்கினால் அத்துறையில் வெற்றிகள் கிடைக்கும் என்பது இந்துக்களின் ஐதீகமாக உள்ளது. இந்நிலையில் இன்று விஜயதசமி தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள 150 ஆண்டுகள் பழமையான எஸ்.ஏ.வி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள பழமையான கலைமகள் (சரஸ்வதி) ஆலயத்தில் குழந்தைகள் கல்வியை துவங்கும் ‘வித்யா (அறிவு) ஆரம்பம்’ எனும் வித்யாரம்பம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த […]
தமிழ் மொழியை வளர்க்க கூடுதல் நடவடிக்கை தேவை என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரையில் அமையவுள்ள மதுரை உலக தமிழ்ச்சங்க நூலகத்தில் அதிகளவு தமிழ் நூல்களை வைக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றதில் மனு அளிக்கப்பட்டு இருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி, தமிழ் மொழியை வளர்க்க கூடுதல் நடவடிக்கை தேவை எனவும், சங்க கால மற்றும் நவீன கால தமிழ் இலக்கியங்களை பிரபலப்படுத்த நடவடிக்கை […]
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் எல்கேஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் பயிற்று மொழியாக உள்ளது.எனினும்,அப்பள்ளிகளில் ஆங்கிலத்திலும் பயிற்று மொழியாக வகுப்புகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள 54 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ் பயிற்று மொழியாக இல்லை என்றும்,மாறாக அப்பள்ளிகள் ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழியாக கொண்டவையாக மாற்றப்பட்டுள்ளதாக தகவல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழியாக கொண்ட […]
அஞ்சல்துறை பணம் செலுத்துவதற்கும் பெறுவதற்குமான படிவங்கள், பணவிடைப் படிவங்கள் ஆகியவையில் தமிழ் அகற்றப்பட்டுள்ளது என சு.வெங்கடேசன் எம்பி கண்டனம். இதுகுறித்து மதுரை சு.வெங்கடேசன் எம்பி., அஞ்சல் பொது மேலாளருக்கு எழுதிய கடிதத்தில், அஞ்சல் துறையில் பண விடை தமிழில் அச்சடிக்கப்பட்டு வந்தது. ஆனால் மின்னணு படிவங்கள் வந்தவுடன் பண விடையில் தமிழுக்கு விடை கொடுக்கப்பட்டு விட்டது. சேமிப்புகளுக்கான பணம் செலுத்துதல் மற்றும் எடுத்தல் ஆகிய படிவங்களும் தமிழில் இருந்தன. தற்போது இல்லை. அலைபேசிகளில் தமிழ் எழுத்துக்களை பதிவிறக்கம் […]
சமஸ்கிருதம் மட்டுமல்ல, தமிழ் மொழியும் கடவுளின் மொழி என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு பசுபதேசுவர சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம்/ குடமுழுக்கு/ நன்னீராட்டு விழாவை நடத்த ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிநீதிமன்றம் விசாரித்தது. அப்போது,தமிழை “கடவுளின் மொழி” என்று போற்றி, உயர்நீதிமன்றம், நாடு முழுவதும் உள்ள கோவில் கும்பாபிஷேகங்களில் அருணகிரிநாதர் போன்ற ஆழ்வார் மற்றும் நாயன்மார்கள் போன்ற புனிதர்கள் […]
காசியின் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான சுப்பிரமணிய பாரதி அமர்வு அமைக்கப்படும் என்று அறிவித்ததற்காக பிரதமர் மோடிக்கு,தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார். மகாகவி பாரதியாரின் 100-வது நினைவு நாளான இன்று,அவரது நினைவைப் போற்றும் வகையில் அவரின் பெருமையை பிரதமர் நரேந்திர மோடி தமிழில் ட்வீட் செய்திருந்தார்.இதனைத் தொடர்ந்து,உத்திரபிரதேச மாநிலம், வாரணாசியில் பனராஸ் இந்து பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியாரின் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதனையடுத்து,பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் […]
கொரோனா தடுப்பூசி முன்பதிவு கோவின் இணையதளத்தில் 2 நாள்களில் தமிழ் மொழி சேர்ப்பு. இந்தியாவில் கொரோனா 2 வது அலை பேரழிவை ஏற்படுத்தி மக்களை வாட்டி வதைத்து வருகிறது, மேலும் கொரோனா தொற்றிலிரந்து மக்களைக் காப்பாற்ற தடுப்பூசி ஒன்றே ஒரே தீர்வாக உள்ளதால், மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களை தடுப்பூசி போட வலியுறுத்திவருகிறது. இதனால் தடுப்பூசி மையங்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கொரோனா தடுப்பூசியை பெற கோவின் என்ற இணையதளம் மூலமாக பதிவு செய்யுமாறு மத்திய […]
கோவின் என்ற இணைய பக்கத்தில், மாநில மொழிகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், 9 மொழிகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில், தடுப்பூசி மையங்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக, மத்திய சுகாதார துறை அமைச்சகத்தின் சார்பாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கோவின் இணையதளத்தில், தடுப்பூசி செலுத்த விரும்புபவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும். இந்நிலையில், இந்த கோவின் என்ற இணையதள பக்கம் ஆங்கில மொழியில் மட்டுமே […]
தேசிய கல்விக்கொள்கையின் மாநில மொழிபெயர்ப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் அசாமி, கன்னடம், மராத்தி, மலையாளம் உள்ளிட்ட 17 மொழிகள் இடம்பெற்றுள்ள நிலையில், தமிழ் மொழிபெயர்ப்பு இல்லை. புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை கடந்த ஆண்டு, ஜூலை 29-ம் தேதியன்று ஒப்புதல் அளித்தது. இதில் இளங்கலை படிப்பிற்கு மாணவர்கள் சேர வேண்டுமானால் நுழைவுத்தேர்வு எழுத வேண்டும், மாநிலங்களில் மூன்று மொழி கொள்கை, உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அதில் இடம்பெற்றுள்ளது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகளும், […]
மத்திய தொல்லியல் துறை பட்டயபடிப்பில் தமிழ் மொழிக்கு அனுமதி மத்திய அரசின் மத்திய தொல்லியல்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து வெளியான தகவல்:மத்திய தொல்லியல் துறை பட்டயபடிப்பில் தமிழ் மொழிக்கு அனுமதி வழங்கி மத்திய தொல்லியல்துறை இணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில் தமிழ், கன்னடம், மலையாளம், ஒடிஷா உள்ளிட்ட 10 மொழிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில்புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் புகழ்பெற்ற நிறுவனமான இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி) இந்தியாவில் அமைந்துள்ள உயர்கல்விக்கான தன்னாட்சி பொது நிறுவனங்கள் ஆகும். இந்தியா முழுவது அமைந்துள்ள இந்நிறுவனம் ஐ.ஐ.டி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களுக்குக்கான ஜே.இ.இ (joint entrance examination) நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வந்தது. இதற்கு முன்னர் (ஐ.ஐ.டி) படிக்க வரும் மாணவர்களுக்கு நுழைவு தேர்வில் ஆங்கிலம், ஹிந்தி , குஜராத்தி போன்ற சில மொழிகளில் மட்டுமே எழுத்தி வந்தனர். இதனால் மற்ற மொழியில் பயிலும் மாணவர்கள் சிரமத்துக்கு உள்ளானார்கள். […]
கேள்விகள் நமக்குள் ஆயிரம் ஆயிரம் இருக்கும். என்னதான் கேள்விகள் நம்மிடம் இருந்தாலும் அதற்கான பதில்கள் கிடைப்பது மிக கடினம் தான். முன்பெல்லாம் நம்மை சுற்றி இருப்போரை பார்த்து கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்வோம். ஆனால், அவை சரியானதாக இருக்குமா என்கிற மற்றொரு கேள்வியும் நமக்கு வந்து விடும். இது போன்ற பிரச்சினைகளை தீர்க்கவே “கோரா” (Quora) என்கிற புதுவித வலைத்தளம் வெளிவந்தது. இதன் வருகைக்கு பின் பல மாற்றங்கள் அறிவுசார் உலகில் நிகழ்ந்து வருகிறது. இப்படிப்பட்ட கோரா-வில் […]
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநில ஆளுநர் ராய் கூப்பர் நடப்பு ஜனவரி மாதத்தை “தமிழ் கலாச்சார மாதம்” ஆக அறிவித்துள்ளார். அமெரிக்காவின் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக வடக்கு கரோலினா மாநிலம் உள்ளது. இங்குள்ள தமிழ் மக்கள் மற்றும் தமிழ் சங்கத்தினர் நடப்பு ஜனவரி மாதத்தை “தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு” மாதமாக அறிவிக்க வேண்டுகோள் விடுத்தனர். அவர்களின் வேண்டுகோளை ஆளுநர் ராய் கூப்பர் ஏற்று அதற்கான ஆணையை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “தமிழ் […]
சென்னையில் நடந்த தமிழ் சமஸ்கிருதம் அகராதி வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தின் போது எழுந்து நிற்காத காஞ்சி விஜயேந்திர சுவாமிக்கு ஸ்டாலின், தமிழருவி மணியன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். சென்னையில் தமிழ் சமஸ்கிருதம் அகராதி வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், பாரதீய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது தமிழ் தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கும் போது, கவர்னர் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நிற்க […]