சென்னை : சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை எந்த நிதியும் மத்திய அரசு வழங்கவில்லை என்கிற குற்றச்சாட்டை முன் வைத்து பேசினார். இது குறித்து பேசிய அவர் ” பெஞ்சல் புயல் மீட்பு பணிகளுக்கு ரூ. 6,675 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நிதியும் கொடுக்கவில்லை. எங்களுடைய ஆட்சி காலத்தில் சில திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம். அதே சமயம் சில திட்டங்களை நிறைவேற்றமுடியாமலும் இருக்கிறோம். […]
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “நீட் தேர்வை ரத்து செய்யப்படும் என்ற வாக்குறுதியில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?” என்கிற கேள்வியை எழுப்பியிருந்தார். அதற்கு பதில் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் ” I.N.D.I.A. கூட்டணி ஆட்சிக்கு வந்திருந்தால் என்றால் நிச்சியமாக நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்று இருப்போம்.இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. அதைப்போல, திமுக ஆட்சி இருந்த வரை தமிழ்நாட்டுக்குள் நீட் தேர்வு […]
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது சட்டப்பேரவைக்கு கருப்பு உடை அணிந்து கொண்டு வருகை தந்த அதிமுக குறித்து பேசியதோடு அவர்களை நோக்கி தன்னுடைய கேள்விகளையும் ஆதங்கத்தோடு எழுப்பினார். இது குறித்து பேசிய அவர் ” எதிர்கட்சியான அதிமுக சார்பில் கருப்பு உடை அணிந்து வந்த போது எனக்கு உண்மையில் கோபம் வரவில்லை. சிரிப்புதான் வந்தது. அதனை பார்த்துவிட்டு இப்படியாவது கருப்பு சட்டை […]
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், நேற்று ஐந்தாவது நாளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த முன்வடிவை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். குறிப்பாக, பெண்களை பின்தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். அது மட்டுமின்றி, பிணையில் கூட அவர்கள் வெளிவர முடியாத அளவுக்கு சட்ட திருத்தும் கொண்டு வரப்பட்டுள்ளது. அதைபோல, குறிப்பிட்ட சில குற்றங்களில் பாதிக்கப்பட்டோரின் அடையாளத்தை வெளிப்படுத்தினால் 3 முதல் 5ஆண்டு […]
சென்னை : சமீபகாலமாக விளைநிலங்களில் கட்டு பன்றிகள் நுழைந்து சேதம் ஏற்படுத்தி வருவதால் அதற்கு தகுந்த நடவடிக்கைகளை அரசு எடுத்துக்கொள்ளவேண்டும் என மக்கள் கோரிக்கைகளை வைத்து வந்தனர். இதனையடுத்து, இன்று நடைபெற்ற 5-வது நாள் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இதனை வலியுறுத்தி எம்எல்ஏக்கள் நடவடிக்கை எடுக்க கோரி பேசினார்கள். குறிப்பாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி எம்.எல்.ஏ. வேல்முருகன் சட்டப்பேரவையில் பேசும்போது ” விளைநிலங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்தும் காட்டுப் பன்றிகளை வேட்டையாட அனுமதிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார். இதனையடுத்து, காட்டுப்பன்றிகளை […]
சென்னை : சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த முன்வடிவை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். குறிப்பாக, பெண்களை பின்தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். அது மட்டுமின்றி, பிணையில் கூட அவர்கள் வெளிவர முடியாத அளவுக்கு சட்ட திருத்தும் கொண்டு வரப்பட்டுள்ளது. அதைபோல, குறிப்பிட்ட சில குற்றங்களில் பாதிக்கப்பட்டோரின் அடையாளத்தை வெளிப்படுத்தினால் 3 முதல் 5ஆண்டு வரை சிறை […]
சென்னை : சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த முன்வடிவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்துள்ளார். “2025 தமிழ்நாடு பெண்ணிற்கு துன்பம் விளைவித்தலைத் தடை செய்கின்ற திருத்தச் சட்டம்” இன்று சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதற்காக தண்டனைகளை கடுமையாக்குவது தொடர்பான மசோதாவை முதல்வர் ஸ்டாலின் தாக்கல் […]
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள் (ஜனவரி 6) அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆளுநர் உரையுடன் தொடங்கிய இந்த கூட்டத்தொடரில் இன்று அவை உறுப்பினர்கள் (எம்எல்ஏக்கள்) கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அதிமுக கேள்வி : அப்போது, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி பொங்கல் பரிசுத்தொகை பற்றி கேள்வி எழுப்பினார். “அதிமுக ஆட்சியில் இருந்த போது ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ரூ.2,500 கொடுக்கப்பட்டது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக ரூ.5 ஆயிரம் […]
சென்னை : அமைச்சர் துரைமுருகன் எப்போது தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு நக்கல் நயாண்டிகளுடன் பதில் கூறுவதை பார்த்திருக்கிறோம். அப்படி தான், இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 4-வது நாளில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும்போது அவரை கலாய்க்கும் வகையில் துரைமுருகன் பதில் கூறி அவையை சிரிப்பலையில் ஆழ்த்தினார். கூட்டத்தொடரின் போது வேல்முருகன் ” தற்போது ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக என்னுடைய தொகுதியில் இருக்கும் உளுந்தம்பேட்டை, நெல்லி குப்பம், பன்ரொட்டி இந்த […]
சென்னை : இந்த ஆண்டிற்கான முதல் தமிழ்நாட்டின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (ஜன. 6) தொடங்கிய நிலையில், 4-வது நாள் கூட்டத்தொடர் இன்று கூடுகிறது. நேற்று சென்னை அண்ணாபல்கலைகழக விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டு காரசாரமான விவாதம் நடைபெற்றது. இன்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பெற்று விவாதம் தொடர்ச்சியாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த 2 […]
சென்னை : இன்று தமிழக பாஜக சார்பில் அக்கட்சியின் மையக்குழு ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்ட பல்வேறு மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தராஜன், ” பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் தற்போது நிறைவடைந்துள்ளது. இதில் தற்போது தமிழகத்தில் […]
சென்னை : இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கேள்வி பதில் நேரத்தில் சீனாவில் 14 வயதுக்கு உட்பட்டோரை பாதிக்கும் HMPV வைரஸ் தொற்று பற்றியும், தமிழகத்தில் அதன் பாதிப்பு குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்தார். அவர் பேரவையில் கூறுகையில், சீனாவில் பரவி வருவதாக கூறப்படும் HMPV எனும் வைரஸானது வீரியமிக்க வைரஸ் இல்லை. இதற்கான பிரத்யேக மருந்துகளும் இல்லை. பிரத்யேக சிகிச்சையும் இல்லை. இதற்கு ஒரே மருந்து, ஒரு 3 […]
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுளளார். இந்த வழக்கில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். யார் அந்த SIR? இதற்கிடையில், அந்த வழக்கு குறித்த FIR இணையத்தில் லீக் ஆகி அதில், யாரோ ஒரு சாருக்கு ஞானசேகரன் கால் செய்வது போல குறிப்பிடப்பட்டிருந்தாக கூறப்படுகிறது. இதனை முன்னிலைப்படுத்தி, ‘யார் அந்த SIR’ […]
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2வது நாளான இன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர், பேரவை நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டு, நாளை காலை 9.30 மணிக்கு மீண்டும் அவைக் கூடும் எனச் சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். அதன்படி, நாளை (ஜன.8)ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப் பெற்று விவாதம் நடைபெறும். வருகின்ற 11-ஆம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலைமைச்சர் […]
இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நேற்று நடைபெற்ற நிலையில், ஆளுநர் கலந்துகொண்டு உரையாற்றுவார் என கூறப்பட்டது. ஆனால், சட்டப்பேரவை கூட்டம் தொடங்கிய 3 நிமிடத்தில் சட்டப்பேரவையில் இருந்து திடீரென வெளியேறினார். அவையின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடியதாகவும், தேசிய கீதமும் பாடப்பட வேண்டும் என்ற தன்னுடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாலும் உரையை படிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியதாக மாளிகை தரப்பில் இருந்து விளக்கமும் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, அரசியல் தலைவர்கள் பலரும் இதற்கு கண்டனங்களை தெரிவித்து […]
சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில்தமிழக அரசின் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்காமல், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட உடன் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். முதலில் தேசிய கீதம் பாடப்படவில்லை. தேசிய கீதத்தை தமிழக அரசு தொடர்ந்து அவமதிக்கிறது என ஆளுநர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. அதே போல, தமிழக அரசு சார்பில் கூறுகையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் எப்போதும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் இசைக்கப்படுவது மரபு என்றும், சட்டப்பேரவை முடியும் போது […]
சென்னை : 2025ஆம் ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இன்று முதல் வரும் சனிக்கிழமை வரையில் இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். இந்த, முறையும் அதற்கேற்றாற்போல, மாநில அரசின் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வசித்து கூட்டத்தொடர் தொடங்குவதாக இருந்தது. ஆனால், சட்டப்பேரவைக்குள் நுழைந்த ஆளுநர் ரவி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட உடனேயே அங்கிருந்து வெளியேறினார். முதலில், தான் தேசிய கீதம் […]
சென்னை : இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இதில், ஆளுநர் உரையாற்றவிருந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி என பலரும் சட்டசபைக்கு வருகை தந்திருந்தார்கள். பின், சட்டப்பேரவைக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நிமிடத்தில் உரையாற்றாமலேயே புறப்பட்டுச்சென்றார். சட்டப்பேரவையில் உரையின் தொடக்கத்தில் தேசிய கீதம் இசைக்கவில்லை என கடந்த ஆண்டு தனது உரையை வாசிக்காமல் இருந்த ஆளுநர் ரவி, இம்முறை அதே காரணத்தைக் […]
சென்னை : இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தலைமை செயலகத்தில் தொடங்கியது. ஆளுநர் கலந்துகொண்டு உரையாற்றுவார் என கூறப்பட்ட நிலையில், சட்டப்பேரவை கூட்டம் தொடங்கிய 3 நிமிடத்தில் சட்டப்பேரவையில் இருந்து திடீரென வெளியேறினார். அவையின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடியதாகவும், தேசிய கீதமும் பாடப்பட வேண்டும் என்ற தன்னுடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாலும் உரையை படிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியதாக மாளிகை தரப்பில் இருந்து விளக்கமும் அளிக்கப்பட்டது. சட்டப்பேரவைக்கு வெளியே […]
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை 2025 ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணி அளவில் தொடங்கிய நிலையில், சட்டப்பேரவைக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நிமிடத்தில் உரையாற்றாமலேயே புறப்பட்டுச்சென்றார். சட்டப்பேரவையில் உரையின் தொடக்கத்தில் தேசிய கீதம் இசைக்கவில்லை என கடந்த ஆண்டு தனது உரையை வாசிக்காமல் இருந்த ஆளுநர் ரவி, இம்முறை அதே காரணத்தைக் கூறி அவையில் இருந்தே வெளியேறினார். சட்டப்பேரவையில் நிகழ்ச்சி தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்ச்சி இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படுவதும் […]