பழம்பெரும் திரைப்பட பாடல் ஆசிரியர் உடுமலை நாராயணகவி பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1899 ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த பூவிளைவாடி எனும் கிராமத்தில் பிறந்தவர் தான் பழம்பெரும் திரைப்படப் பாடலாசிரியர் உடுமலை நாராயணகவி. இவர் பல்வேறு கிராமிய கலைகளை ஆர்வத்துடன் கற்று பயின்றவர். குறிப்பாக புரவியாட்டம், சிக்கு மேலாட்டம், தப்பாட்டம், உடுக்கடிப்பாட்டு ஒயில் கும்மி ஆகியவை இவர் மிகவும் விரும்பி பெற்ற கலைகளாக கூறப்படுகிறது. இவர் விடுதலைப் போராட்டம் […]