பழம்பெரும் திரைப்பட பாடல் ஆசிரியர் உடுமலை நாராயணகவி பிறந்த தினம் இன்று…!

Default Image

பழம்பெரும் திரைப்பட பாடல் ஆசிரியர் உடுமலை நாராயணகவி பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

1899 ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த பூவிளைவாடி எனும் கிராமத்தில் பிறந்தவர் தான் பழம்பெரும் திரைப்படப் பாடலாசிரியர் உடுமலை நாராயணகவி. இவர் பல்வேறு கிராமிய கலைகளை ஆர்வத்துடன் கற்று பயின்றவர். குறிப்பாக புரவியாட்டம், சிக்கு மேலாட்டம், தப்பாட்டம், உடுக்கடிப்பாட்டு ஒயில் கும்மி ஆகியவை இவர் மிகவும் விரும்பி பெற்ற கலைகளாக கூறப்படுகிறது.

இவர் விடுதலைப் போராட்டம் தீவிரமாக இருந்த காலகட்டத்தில் தேசிய உணர்வு மிக்க பாடல்கள் பலவற்றை எழுதி மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியவர். இவர் தனது பாடல்களில் பல்வேறு சமுதாய சீர்திருத்தம் நிறைந்த கருத்துக்களை புகுத்தியவர். முன்னணி பாடலாசிரியராக  கவிராயர் என அன்போடு அழைக்கப்பட்டுள்ளார்.

இவரது திறமையயை பாராட்டி 1967ம் ஆண்டு  சங்கீத நாடக சங்கம் சிறந்த பாடலாசிரியராக இவரை தேர்வு செய்தது. மேலும் திரையுலகில் தனக்கென்று தனி இடம் பெற்ற இவர், பல்லாயிரக்கணக்கான பாடல்களை எழுதியுள்ளார்.

பாடகர் மட்டுமல்லாமல் கவிஞர், நடிகர், நாடக ஆசிரியர், சீர்திருத்தவாதி என பன்முகத்தன்மை கொண்ட உடுமலை நாராயணகவி 1981 ஆம் ஆண்டு தனது 82-வது வயதில் மறைந்தார். இவரது நினைவாக 200ஆம் ஆண்டு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. மேலும் அவரது ஊரில் இவருக்கு மணிமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. இவரது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

ind vs pak war Donald Trump
ind vs pak war
IndiaPakistanWarUpdates
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war