சென்னை : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஏற்கனவே, கடந்த ஜூலை 2-ஆம் தேதி சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் “திமுக அரசுக்கு எதிராக எந்தவொரு கட்டத்திலும், எந்தப் பிரச்சனையிலும் நாங்கள் ஒரு வார்த்தை கூட விமர்சனம் செய்ததில்லை. இனியும் செய்ய மாட்டோம். கலைஞர் (மு.கருணாநிதி) இருந்தவரை அவருக்கு பக்கபலமாக இருந்தேன். அவருக்கு நான் அளித்த வாக்குறுதிப்படி, முதல்வர் ஸ்டாலினுக்கும் உறுதுணையாக இருப்பேன். இந்த வாக்குறுதியில் உறுதியாக இருக்கிறேன். […]