சென்னை : தவெகவின் முதல் மாநாடானது கடந்த 27-ம் தேதி வெற்றிகரமாக விக்ரவாண்டியில் நடைபெற்று முடிந்தது. இந்த மாநாட்டில் தவெக தலைவர் விஜய், மேடையில் உணர்ச்சி போங்க பேசி இருப்பார். அது தான், தற்போது வரையில் பேசுபொருளாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று 117-வது தேவர் ஜெயந்தி தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. இதனால், இன்று காலை பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து, சென்னை நந்தனத்தில் […]
சென்னை : மாநகராட்சி மேயரான ஆர்.பிரியா தலைமையில் நேற்று மாதாந்திர மாமன்ற கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் 79 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில், குறிப்பாக சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 9 கால் பந்து திடல்களை தனியாருக்கு அளிக்க உள்ளதாக ஒரு தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அங்கு பயிற்சி பெற்று வரும் விளையாட்டு வீரர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும், எதிர்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமியும் இதற்கு கண்டனம் தெரிவித்து பேசி இருந்தார். மேலும், […]
சென்னை : கடந்த அக்-27ம் தேதி தவெக முதல் மாநில மாநாடானது பிரம்மாண்டமாக விக்கிரவாண்டி, வி.சாலையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தவெக தலைவர் விஜய் அவர்களுக்கு யானை சின்னம் பொறிக்கப்பட்ட வீரவாள் பரிசாக அளிக்கப்பட்டது. அந்த வாள், சோழர் காலத்தில் போர் வீரர்கள் பயன்படுத்திய வாளை போன்று, அதாவது அந்த வாள் சோழர்களின் வாளின் வடிவமைப்பை போல உருவாக்கப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. விஜய்க்கு அளிக்கப்பட்ட இந்த பரிசு வாள், தஞ்சை மாவட்டம் சுவாமி மலையில் உள்ள தேசிய […]
சென்னை : நாளை அக்டோபர் 31-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. எனவே, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில், “நாடு முழுவதும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க, தீபத் திருநாளாம் தீபாவளி திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் அன்பிற்கினிய மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் […]
சென்னை : தீபாவளியை முன்னிட்டு, பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளதால் சென்னை ஸ்தம்பித்துள்ளது. இன்று (அரைநாள்) முதல் நவ.3 வரை தொடர் விடுமுறை வருவதால், திருச்சி, மதுரை, நெல்லை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்ல மக்கள் தொடங்கியுள்ளனர் தீபாவளியைக் கொண்டாட சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து இன்று 4,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இதனிடையே, சென்னையில் இருந்து நேற்று ஒரே நாளில் அரசுப் […]
இராமநாதபுரம்: முத்துராமலிங்க தேவரின் 117வது ஜெயந்தியை முன்னிட்டு, பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் . அப்பொழுது, மூத்த அமைச்சர்கள், திமுக நிருவாகிகள் பங்கேற்று மரியாதையை செலுத்தினர். கடந்த முறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்த சென்ற நிலையில், இந்த முறை தமிழக முதலமைச்சர் நேரில் சென்று மரியாதை செலுத்தி வருகிறார். ஏற்கனவே, மதுரை மாவட்டம், கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். […]
சென்னை : கடந்த அக்டோபர் 27 அன்று விக்கிரவாண்டில் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் விஜய் பேசிய கருத்துக்கள் தான் தற்போது வரையில் தமிழக அரசியல் வட்டாரத்தில் குறிப்பாக திமுக கூட்டணி வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. பாசிசமா பாயாசமா.? ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என விசிக முன்வைத்த கோரிக்கையை மறைமுகமாக குறிப்பிட்டு விஜய் கூட்டணி பற்றியும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற விதத்திலும் பேசினார். மேலும், […]
சென்னை : நடிகர் அஜித்குமார் திரைத்துறையில் முன்னணி நட்சத்திரமாக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தயம் தொடர்பான விஷயங்களில் ஆர்வமுடன் பங்கேற்று வருகிறார். அடுத்தாண்டு நடைபெற உள்ள ஐரோப்பா GT3 கோப்பை கார் பந்தய போட்டியில் கலந்து கொள்ள உள்ளார். அதற்கான பயிற்சிகளில் தற்போது படிப்பிடிப்பு இடைவேளைகளுக்கு நடுவே கலந்து கொண்டு வருகிறார். மேலும், அஜித்குமார் ரேஸிங் எனும் கார் பந்தய உபகாரணங்களுக்கான நிறுவனத்தையும் தொடங்கி செயல்படுத்தி வருகிறார். நேற்று அஜித்குமார் கார் ரேஸிங்கிற்காக பயிற்சி மேற்கொண்ட […]
சென்னை : நடந்து முடிந்த த.வெ.க மாநாட்டில் அக்கட்சி தலைவர் விஜய் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என தொடங்கி, பிளவுவாத அரசியல், ஊழல்வாத அரசியல் தனது எதிரிகள் எனவும், திராவிட மாடல் அரசு என மக்களை ஏமாற்றுகின்றனர் என நேரடி விமர்சனங்களை முன் வைத்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரிய அளவில் பேசுபொருளாகியுள்ளது. விஜயின் பேச்சுக்கு திமுகவை சேர்ந்த தலைவர்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது கருத்தை […]
திண்டுக்கல் : த.வெ மாநாட்டில் விஜய் திமுகவை நேரடியாக விமர்சித்துப் பேசிய விஷயம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் பாசிசம்னா, நீங்க என்ன பாயாசமா.? நீங்களும் அவர்களுக்கு ஒன்னும் சளச்சவங்க இல்ல என திமுக அரசை நேரடியாகவும், பாஜகவை மறைமுகமாகவும் விமர்சித்துப் பேசியிருந்தார். எனவே, விஜய் பேசிய விஷயத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் , திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட பலரும் எதிர்மறையான விமர்சனங்களை முன் வைத்திருந்தார்கள். அவர்களை […]
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, (செப்டம்பர் 30.10.2024) புதன்கிழமை பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் எனத் தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அது என்னென்ன, பகுதி என்பதைக் கீழே பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்… சென்னை GPD சிப்காட் பகுதி, மதர்பாக்கம் புறவழிச்சாலை, புதுப்பேட்டை, G.R.கண்டிகை, புதிய GPD பகுதி, பாலயோகி நகர், எல்லையம்மன் நகர், பாலகிருஷ்ணாபுரம், S.P.பேட்டை, ஐயர் கண்டிகை, SR கண்டிகை, […]
சென்னை : அக்-27ம் தேதி விழுப்புரம் விக்ரவாண்டியில் தவெகவின் முதல் மாநாடு மிகவும் பிரமாண்டமாக நடைபெற்று முடிவடைந்தது. மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் மற்றும் கட்சியின் இரண்டாவது பாடல் வெளியிடப்பட்டது. அதைப்போல மாநாட்டில் விஜய் பேசிய விஷயங்களும் பெரிய அளவில் தொண்டர்களுக்கு மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில். மாநாட்டில் விஜய் பேசிய விஷயங்கள் அவர்களுடைய தொண்டர்களிடையே எவ்வளவு ஆதரவு பெற்று வந்ததோ அதே சமயம் அதற்கு எதிராக அரசியல் தலைவர்களிடம் எழுந்த கருத்துக்கள் பல விஜயின் பேச்சுக்கு எதிர்மறையான […]
சென்னை : கடந்த அக்-27ம் தேதி விழுப்புரம் விக்ரவாண்டியில் தவெகவின் முதல் மாநில மாநாடானது பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் லட்சகணக்கான தொண்டர்கள் பங்கேற்று தவெக கட்சிக்கு ஆதரவு தெரிவித்தனர். அந்த மாநாட்டில் விஜய் பேசியது தான் அடுத்த 2 நாளாக தமிழகத்தில் தவெகவின் முதல் மாநாடு தான் பேசுபொருளாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில், மாநாடு முடிந்து 2 நாட்களுக்கு பிறகு விஜய் அவரது எக்ஸ் பக்கத்தில், தனது தவெக கட்சித் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து […]
சென்னை : வருகின்ற அக்டோபர் 31-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. எனவே, தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை (அக்.30) பள்ளி, கல்லூரிகளுக்கு அரை நாள் விடுமுறை என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் ” தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நாளை (30.10.2024) முற்பகல் மட்டும் செயல்படும், பிற்பகல் அரை நாள் விடுமுறை அறிவித்து, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது” என […]
கிருஷ்ணகிரி : விக்கிரவாண்டி வி.சாலையில் விஜய் நடத்திய பிரமாண்ட த.வெ.க மாநாட்டை பார்ப்பதற்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் வருகை தந்திருந்தார்கள். அதில் ஒருவர் தான் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மகேஸ்வரன். இவர் மாநாட்டில் கலந்து கொள்ள அந்த மாவட்டத்தில் இருந்து மாவட்ட பொறுப்பாளர் தலைமையில் வந்த வேனில் வருகை தந்துள்ளார். பிறகு மாநாடு நடந்து முடிந்தபின் கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால் எந்த இடத்தில் தாங்கள் வந்த வேன் பார்க்கிங் செய்யப்பட்டது என்பது தெரியாமல் காணாமல் போகியுள்ளார். தன்னுடைய […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கடந்த 27-ஆம் தேதி விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பிரமாண்டமாக நடைபெற்று முடிவடைந்தது. மாநாட்டில் அக்கட்சித் தலைவர் விஜய் பேசிய பல விஷயங்களும் அரசியல் வட்டாரத்தில் பெரிய அளவில் பேசுபொருளாகவும் மாறியிருக்கிறது. குறிப்பாக, அவர்கள் பாசிசம்னா, நீங்க என்ன பாயாசமா.? நீங்களும் அவர்களுக்கு ஒன்னும் சளச்சவங்க இல்ல என திமுக அரசை நேரடியாகவும், பாஜகவை மறைமுகமாகவும் விமர்சித்துப் பேசியிருந்தார். Read More- “அவங்க பாசிசம்னா., நீங்க பாயாசமா.?” திமுகவை […]
தூத்துக்குடி : உலகம் முழுவதும் உள்ள ஹிந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டியாகத் தீபாவளி கருதப்படுகிறது. இந்த தீபாவளி திருநாளில், வெடி வெடிப்பதுடன், புத்தாடை, பலகாரங்கள் என அந்நாள் முழுவதுமே களைக்கட்டும் ஒரு விழாவாகவே தமிழகம் முழுவதுமே கொண்டாடப்பட்டுகிறது. அப்படி தீபாவளியில் முக்கிய பங்காகப் பார்க்கப்படுவது இனிப்புகளும், பலகாரங்களும் தான். அதிலும், பலர் இந்த இனிப்புகள், பலகாரங்கள் என அனைத்தையும் பிரபல பரிட்சியமான கடைகளில் வாங்குவார்கள். உணவில் கலப்படம், தரமற்ற உணவு என இப்படி ஒரு சில காரணங்களுக்காகச் […]
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பொதுமக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார். பொதுமக்கள் பாதுகாப்பாக தீபாவளி கொண்டாட வேண்டும் என்றும், தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியத்தை முன்கூட்டியே வழங்க வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். அதனை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் நடத்திய மாநாடு குறித்தும், அம்மாநாட்டில் விஜய் பேசிய கருத்துக்கள் பற்றியும் […]
சென்னை : ரிப்பன் மாளிகையில் மாதாந்திர மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் மொத்தம் 79 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கின்றன. அதிலும், மிக முக்கியமான தீர்மானமாகப் பார்க்கப்படுவது என்னவென்றால், சென்னை சைதாப்பேட்டையில் அமைந்துள்ள 9 கால்பந்து திடல்களைத் தனியாரிடம் ஒப்படைக்கும் தீர்மானம் தான். இது அங்குக் கால்பந்து பயிற்சி பெற்று வரும் விளையாட்டு வீரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அங்கு விளையாட்டு பயிற்சி மேற்கொண்டு வரும் கால்பந்து வீரர்கள் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து […]
சென்னை : தமிழ்நாடு முழுதுவதும் அரசு பள்ளிகளில் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களை கனவு ஆசிரியர்களாக தேர்வு செய்து அவர்களை பிரான்ஸ் நாட்டிற்கு இன்ப சுற்றுலா அழைத்து சென்றது தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை. இதனை கடந்த அக்டோபர் மாதம் 20ஆம் தேதி அறிவித்து இருந்தார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ். பள்ளிக்கல்வித்துறை செயல்பாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் , பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுலா சென்றிருந்த கனவு ஆசிரியர்கள் 55 பேரும் இன்று தாயகம் திரும்பினர். அவர் […]