விரைவில் வெளிவரப்போகிறது 5ஜி ஸ்மார்போன்..! அதில் அப்படி என்ன ஸ்பெஷல்..?

சீன ஸ்மார்ட்போன் மற்றும் டெலிகாம் கியர் தயாரிப்பாளரான ஹூவாய், 2019 ஆம் ஆண்டின் இரண்டாவது பாதியில் அதன் முதல் 5ஜி ஸ்மார்ட்போனை தொடங்குவதாக அறிவித்துள்ளது.

சீன ஸ்மார்ட்போன் மற்றும் டெலிகாம் கியர் தயாரிப்பாளரானஹூவாய், 2019 ஆம் ஆண்டின் இரண்டாவது பாதியில் அதன் முதல் 5ஜி ஸ்மார்ட்போனை தொடங்குவதாக அறிவித்துள்ளது.

அந்த 5ஜி ஸ்மார்ட்போனில் ஹூவாய் நிறுவனத்தின் சொந்த 5ஜி மோடம் இடம்பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்ஸேனில் நடந்த நிறுவனத்தின் 2019 ஆம் ஆண்டிற்கான தனது திட்டங்களை நிறுவனம் வெளிப்படுத்தும் ஹூவாய் உலகளாவிய ஆய்வாளர் உச்சிமாநாடு 2018-ல் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

unknown node

ஹூவாய் நிறுவனத்தின் இந்த முயற்சி, 5ஜி தொலைத்தொடர்பு துறையின் அடுத்தகாட்ட வளர்ச்சியாகவும் மற்றும் ஒரு மிகப்பெரிய விஷயமாகவும் பார்க்கப்படுகிறது.

ஹூவாய் நிறுவனத்தின் ஹூவாய் மேட் 20 ஆனது 2018 ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டில் வெளியாகும் என்கிற நிலைப்பாடு உள்ளதால், கூறப்படும் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஹூவாய் மேட் 30 ஆக இருக்கவும், அதுவொரு 5ஜி மோடம் கொண்டிருக்கவும் அதிக வாய்ப்புள்ளது.

unknown node

ஹூவாய் நிறுவனம், அதன் 5ஜி ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்களை இன்னும் வெளியிடவில்லை என்றாலும் கூட, ஹூவாய் 5ஜி மோடம்களை தயாரிப்பதை உறுதி செய்துள்ளது. சமீபத்தில் முடிவுற்ற மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2018 நிகழ்வில், ஹவாய், அதன் 5ஜி மோடம், Balong 5G01 சிப் ஆகியவற்றை அறிவித்தது. இந்த 5ஜி மோடம் ஆனது ஒரு 2.3 Gbps என்கிற அளவிலான டவுன்லிக் வேகத்தை வழங்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

மறுகையில் அறிவிக்கப்பட்ட Balong 5G01 சிப் ஆனது ஸ்மார்ட்போன்களுக்குப் பொருந்தாது, அதற்கு பதிலாக, ஹூவாய் தனது சொந்த வாகனம் மற்றும் பிற ஐஓடி தயாரிப்புகளில் அதை பயன்படுத்தும். ஹூவாய் நிறுவனத்தின் படி, வருகிற 2025-க்குள் 1.1 பில்லியன் 5ஜி இணைப்புகளும் மற்றும் 200 மில்லியன் அளவிலான 5ஜி மூலம் இணைக்கப்பெற்ற கனெக்டெட் கார்களும் இருக்கும்.

இந்தியாவை பொறுத்தவரை, ஹூவாய் நிறுவனத்தின் 5ஜி கனவை நிஜமாக்க இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான பார்தி ஏர்டெல் உதவும். டெல்லியில், ஹவாய் மற்றும் ஏர்டெல் கூட்டணி ஏற்கனவே 5ஜி இணைப்புகளை அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2021 ஆம் ஆண்டில் 5ஜி ஸ்மார்ட்போன்களின் ஏற்றுமதி 110 மில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5ஜி சிப்களின் விலை புள்ளி அதிகமாக இருக்கும் என்பதால் 5ஜி திறன் ஆனது ஆரம்பத்தில் பிரீமியம் ஸ்மார்ட்போன்களில் மட்டுமே இணைக்கப்படும்.