அடுத்த பார்ட் எங்க? தலைவலி இனி இல்ல! ரீல்ஸில் மெட்டாவின் மெகா அப்டேட்!

கிரியேட்டர்கள் தங்களது தொடர்ச்சியான வீடியோக்களை வெவ்வேறு பகுதிகளாகப் பிரிக்காமல், ஒரே க்ளிக்கில் அனைத்து எபிசோடுகளையும் ஒன்றாக இணைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

Hero Image

டெல்லி : இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் (Instagram Reels) மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களில் நீண்ட வீடியோக்களைப் பதிவிடும் டிஜிட்டல் கன்டென்ட் கிரியேட்டர்களின் மிகப்பெரிய கவலையாக இருந்தது அதன் நீளம் தான். ஒரு கதையையோ அல்லது எடிட்டிங் வீடியோவையோ முழுமையாகக் காட்ட நினைத்தால், அதை 90 விநாடிகளுக்குள் சுருக்க வேண்டும். அப்படி, இல்லையெனில் Part 1, Part 2, Part 3 எனத் தனித்தனியாகப் பதிவிட்டு, "அடுத்த பார்ட் கமெண்ட் பாக்ஸில் உள்ளது" என்ற வேண்டிய நிலை இருந்தது.

இந்த ‘ரிடென்ஷன்’ (Retention Drop-off) தலைவலிக்கு முற்றுப்புள்ளி வைக்க, மெட்டா (Meta) நிறுவனம் தற்போது ரீல்ஸ் தளத்தில் 'சீரிஸ்' (Series) என்ற ஒரு புரட்சிகரமான புதிய அம்சத்தை ஜூன் 2026-ல் உலகளாவிய ரீதியில் அறிமுகப்படுத்தத் தொடங்கியுள்ளது.

இந்த புதிய அம்சம், யூடியூப்பில் இருக்கும் பிளேலிஸ்ட் (Playlist) வசதியைப் போன்றது. ஆனால் ரீல்ஸ் வடிவத்திற்கு ஏற்ப மிக எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட்க்கு பிறகு, இனி நீங்கள் ஒரு பெரிய எடிட்டிங் வீடியோவையோ அல்லது வெப்-சீரிஸ் கதையையோ துண்டு துண்டாகப் பதிவேற்றத் தேவையில்லை.

வீடியோவை அப்லோட் செய்யும்போதே, 'Create a Series' என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து, அதன்கீழ் எபிசோட் 1, எபிசோட் 2, எபிசோட் 3 என வரிசையாகப் பதிவிடலாம். அதே சமயம், ஒரு பயனர் உங்களது 'Episode 1' ரீல்ஸை முழுமையாகப் பார்த்து முடித்ததும், ஸ்கிரீனின் கீழ் பகுதியில் 'Watch Episode 2' என்ற பட்டன் தானாகவே தோன்றும். அதை க்ளிக் செய்தால், பயனர் உங்களது புரொஃபைலுக்குள் சென்று தேடாமலேயே அடுத்த எபிசோட் ஓடத் தொடங்கும்.

இந்த அம்சத்தின் மூலம் கன்டென்ட் கிரியேட்டர்களின் வியூஸ் மற்றும் ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை பல மடங்கு உயரப்போகிறது எப்படியென்னறால், பொதுவாக, Part 1 பார்க்கும் ஆடியன்ஸில் 60% பேர் Part 2-வை தேடிப் பார்ப்பதில்லை. சோம்பேறித்தனம் காரணமாக அப்படியே ஸ்க்ரோல் செய்து கடந்துவிடுவார்கள். ஆனால் இந்த 'ஒரே க்ளிக் பிளேலிஸ்ட்' வசதி மூலம், உங்களது ஒரு எபிசோட் வைரல் ஆனாலும், ஆடியன்ஸ் அடுத்தடுத்த எபிசோடுகளை ஒரே இடத்தில் பார்த்துவிடுவார்கள். இதனால் கிரியேட்டர்களின் 'சராசரி பார்க்கும் நேரம்' (Average Watch Time) பல மடங்கு அதிகரிக்கும்.

தற்போது உலகளவில் குறுகிய கால 'மினி வெப்-சீரிஸ்' (Short-form Mini Series) கன்டென்ட்டுகள் மிகப்பெரிய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன. இதை மனதில் வைத்தே மெட்டா நிறுவனம் இந்த அப்டேட்டைக் கொண்டு வந்துள்ளது. வரும் நாட்களில், யூடியூப் பிளேலிஸ்ட்டைப் போல இந்த சீரிஸ் கன்டென்ட்டுகளுக்குள் தனித்தனியாக 'சர்ச் மற்றும் இண்டெக்ஸிங்' (SEO Search Indexing) வசதியையும் மெட்டா கொண்டு வரவுள்ளது. அதாவது, யாராவது ஒரு குறிப்பிட்ட தலைப்பைத் தேடினால், உங்களது ஒட்டுமொத்த ரீல்ஸ் சீரிஸும் அப்படியே எக்ஸ்ப்ளோர் (Explore) பக்கத்தில் வந்து நிற்கும்.