தொழில்நுட்பம்

இந்தியாவில் புதுப்பொலிவுடன் களமிறங்குகிறது OnePlus 11 5G..! எப்போது தெரியுமா.?

Published by
கெளதம்

ஸ்மார்ட்போன் பிரியர்கள் அனைவராலும் அதிகம் விரும்பப்படும் ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் ஸ்மார்ட்போன், கேமரா மட்டுமல்லாமல் அனைத்து வித பயன்பாட்டிற்கும் அருமையாக இருக்கும். சமீபத்தில், ஒன்பிளஸ் நிறுவனம் அதன் சாதன வெளியீட்டு நிகழ்வில், பல அட்டகாசமான சாதனங்களுடன் ஒன்பிளஸ் 11 5G (OnePlus 11 5G) ஸ்மார்ட்போனை வெளியிட்டது.

OnePlus 11 5G [Image source : Twitter/@valismind]

இந்த நிகழ்வில் ஒன்பிளஸ் 11 5G ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ஒரு புதிய மார்பில் ஒடிசி (Marble Odyssey Colour) நிறத்துடன் அறிமுகம் செய்யப்பட உள்ளது என நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த போன் ஏற்கனவே, டைட்டன் பிளாக் (Titan Black), எடேர்னல் க்ரீன் (Eternal Green) என இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. இவை இரண்டும் ரூ. 56,999-க்கு கிடைக்கிறது.

OnePlus 11 5G [Image source : Twitter/@FoneArena Mobile]

தற்போழுது, புதிய கலரான மார்பில் ஒடிசி (Marble Odyssey Colour) கலர் இந்தியாவில் Amazon.in மற்றும் OnePlus.in ஆகிய இணையதளத்தில் ஜூன் 6 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது என அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஆனால், விலை குறித்த தகவல் இன்னும் அறிவிக்கவில்லை, இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் OnePlus 11 5G-ன் விலை ரூ. 64,999 ஆக இருக்கும் என்று  தகவல் கிடைத்துள்ளது.

OnePlus 11 5G [Image source : Twitter/@FoneArena Mobile]

இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள்:

  1. ஒன்பிளஸ் 11 5G ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் அளவுடைய குவாட்-எச்டி+ (Quad-HD+ Display) டிஸ்ப்ளே பயன்படுத்தப்பட்டுள்ளது.
  2. பின்புற முக்கிய கேமரா 50 எம்பி கொண்ட சோனி IMX890 (Sony IMX890) சென்சாருடன் வருகிறது.
  3. 48 எம்பி கொண்ட அல்ட்ரா-வைட் கேமராவானது சோனி IMX581 (Sony IMX581) சென்சாருடன் வருகிறது.
  4. 32 எம்பி கொண்ட போர்ட்ரெய்ட் டெலி கேமராவானது சோனி IMX709 (Sony IMX709) சென்சாருடன் வருகிறது.
  5. இதன் முன்புறத்தில் 16 மெகாபிக்சல் கொண்ட சோனி IMX471 (Sony IMX471) சென்சார் உடைய கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது.
  6. ஒன்பிளஸ் 11 5G ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 (Qualcomm Snapdragon 8 Gen 2 SoC) மூலம் இயக்கப்படுகிறது.
  7. இந்த ஸ்மார்ட்போன் 16 ஜிபி ரேம்+256 ஜிபி நினைவகத்துடன் வர உள்ளது.
  8. இரண்டு நானோ சிம் ஆதரவுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 இல் ஆக்சிஜன்ஓஎஸ் 13 (OxygenOS 13) உடன் இயங்குகிறது.
  9. ஒன்பிளஸ் 11 5G ஸ்மார்ட்போன் ஆனது 100W சூப்பர்வூக் (SuperVOOC) பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.
Published by
கெளதம்

Recent Posts

சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!

டமாஸ்கஸ் : இஸ்ரேல் தனது அண்டை நாடான சிரியாவில் ஒரு பெரிய வான்வழித் தாக்குதலை நடத்திருக்கிறது. காசாவில் ஹமாஸ் மற்றும்…

52 minutes ago

நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என திமுக…

2 hours ago

இங்கிலாந்தில் பழமையான மரத்தை வெட்டிய இருவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை.!

இங்கிலாந்தில் 200 ஆண்டுகள் பழமையான மற்றும் அந்நாட்டின் அடையாளமாக விளங்கிய சைக்காமோர் கேப் மரத்தை வெட்டியதற்காக இரண்டு நபர்களுக்கு 4…

2 hours ago

“9 வருஷம் எப்படியோ தாக்கு புடிச்சிட்டேன்… இன்னும் 2 மாசம் தானே” – விஷால் கலகல பதில்.!

சென்னை : விஷாலின் 35-வது படத்தின் பூஜை சமீபத்தில் நடந்து முடிந்தது. தற்பொழுது, 'ரெட் பிளவர்' திரைப்பட நிகழ்வில் கலந்து…

3 hours ago

”மருத்துவ கழிவுகளை கொட்டினால் குண்டர் சட்டம் பாயும்” – தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!

சென்னை : தமிழ்நாட்டில் மருத்துவக் கழிவுகளை அனுமதியின்றி கொட்டுவது கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது. இதற்காக, தமிழ்நாடு அரசு குண்டர் சட்டத்தின்…

3 hours ago

ஆளுநர் மாளிகை சார்பில் இல்லாத திருக்குறளுடன் விருது.., சர்ச்சையில் ஆளுநர்.!

சென்னை : ஆளுநர் மாளிகையில் கடந்த ஜூலை 13-ம் தேதி அன்று நடைபெற்ற மருத்துவர் தின நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர்…

4 hours ago