ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) பதவியில் இருந்து, சாம் ஆல்ட்மேன் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நமது உலகில் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்படும் டெக்னாலஜி என்பது அதிக அளவில் வளர்ந்து வரும் ஒன்றாக உள்ளது. இந்த டெக்னாலஜி உலகையே புரட்டிப்போடும் விதமாக சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓபன் ஏஐ, ஒரு புதிய சாட்போட்டைக் கண்டுபிடித்தது. அதுதான் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த ‘சாட் ஜிபிடி (Chat GPT)’ ஆகும். கடந்த 2022ம் […]
ஸ்மார்ட்போன் பயனர்களிடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒப்போவின், ரெனோ 11 சீரிஸ் ஆனது, வரும் நவம்பர் 23ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த சீரிஸில் ஒப்போ ரெனோ 11 மற்றும் ஒப்போ ரெனோ 11 ப்ரோ என இரண்டு மாடல்கள் அறிமுகம் ஆகின்றன. இதற்கான வெளியீட்டு தேதி நெருங்கி வருகிறது. இந்நிலையில், ஒப்போ அதன் சீன மைக்ரோ பிளாக்கிங் தளமான வெய்போவில், கடந்த சில நாட்களாக அறிமுகம் செய்யப்படவுள்ள ஸ்மார்ட்போன்களின் கூடுதல் விவரங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. […]
மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம், பயனர்களுக்காக அதன் செயலியில் அவ்வப்போது பல புதிய அம்சங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கூட ஒரே வாட்ஸ்அப்பில் இரண்டு கணக்குகளை பயன்படுத்தும் அம்சம், புகைப்படம் மற்றும் வீடியோக்களை எச்டி குவாலிட்டியில் அனுப்பும் அம்சம் போன்றவற்றை அறிமுகம் செய்தது. இதனை தொடர்ந்து தற்பொழுது வாட்ஸ்அப்பில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலமாக இயங்கக்கூடிய சாட் பாட்டை அறிமுகம் செய்துள்ளது. மெட்டா ஏஐ எனப்படும் அதிநவீன ஏஐ தொழில்நுட்பத்தை, நிறுவனம் அதன் பல்வேறு […]
கடந்த செப்டம்பர் 13ம் தேதி ஆப்பிள் நிறுவனம், ஐபோன் 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. இதில் முக்கிய மாற்றமாக மற்ற ஐபோன்களில் இருப்பது போல அல்லாமல், ஆன்ட்ராய்டு போன்களில் இருக்கக்கூடிய யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட்டாக மாற்றியது. இதைத்தொடர்ந்து தற்போது மிக முக்கிய அறிவிப்பை ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின் படி, ஆப்பிள் ஆர்சிஎஸ் (ரிச் கம்யூனிகேஷன் சர்வீசஸ்) மெசேஜிங் வசதியை ஐபோன்களில் கொண்டு வரவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வசதி அடுத்த ஆண்டு சாப்ட்வேர் அப்டேட் […]
மெட்டாவிற்கு சொந்தமான வாட்ஸ்அப் அதன் செயலியில் அவ்வப்போது புதிய அப்டேட்களைக் கொண்டு வருவது போல, இன்ஸ்டாகிராமும் தனது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் செயலியில் அடிக்கடி அம்சங்களைச் சேர்த்து வருகிறது. அந்த வகையில் இப்போது கூட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களிலிருந்து ஸ்டிக்கர்களை உருவாக்கக் கூடிய ஒரு ஏஐ டூல் உட்பட பல அம்சங்களைக் கொண்டு வந்துள்ளது. ரீல்களை உருவாக்க புதிய வழிகள் இதுவரை ஏதேனும் ஒரு ரீல் நீங்கள் போஸ்ட் செய்யவேண்டும் என்றால், அந்த வீடியோ அல்லது புகைப்படத்தில் […]
ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான விவோ, அதன் ஒய் சீரிஸில் புதிதாக இரண்டு ஸ்மார்ட்போன்களை அமைதியாக சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, விவோ ஒய்100ஐ 5ஜி (Vivo Y100i 5G) மற்றும் விவோ ஒய்36 (Vivo Y36) என்ற ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகியுள்ளது. இதில் கடந்த மே மாதம் உலக சந்தையில் விவோ ஒய்36 4ஜி மற்றும் 5ஜி வேரியண்ட்களில் வெளியானது. ஆனால் இப்போது சீனாவில் 5ஜி வேரியண்ட் மட்டுமே ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. தொடர்ந்து விவோ ஒய்100ஐ […]
மனிதர்களின் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக ஆண்ட்ராய்டு மொபைல் அமைந்துள்ளது. அதிலும் சில செயலிகளை அதிக பயனர்கள் பயன்படுத்தி வருகின்றன. இதில் குறிப்பாக உலக நாடுகளின் முழுவதும் வாட்ஸ் அப்பில் (whatsapp) பயன்படுத்துவர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒருவருக்கொருவர் தங்களது தகவல்களை பரிமாற்றிக்கொள்ள இது மிகவும் பயன்பட்டு வருகிறது. வாட்ஸ் அப்பில் நொடி பொழுதில் ஆடியோக்கள், வீடியோக்கள் பரிமாற்றம் செய்யப்படுவதால் இந்த செயலியை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் வாட்ஸ் அப்பில் கடந்த […]
சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டில் அதன் ரசிகர்களுக்காக ஃபேன் எடிஷன் சாதனங்களில் அதிக கவனம் செலுத்தியது. அந்த வகையில் கடந்த அக்டோபர் 4ம் தேதி மிட் ரேஞ்ச் விலையில் ஃபேன் எடிஷன் சீரிஸில் எஸ்23 எஃப்இ ஸ்மார்ட்போன், டேப் எஸ்9 எஃப்இ மற்றும் கேலக்ஸி பட்ஸ் எஃப்இ போன்றவற்றை உலக அளவில் அறிமுகப்படுத்தியது. இதில் குறிப்பாக இந்த ஆண்டில் சாம்சங் நிறைய ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும், கேலக்ஸி பட்ஸ் எஃப்இ மட்டுமே இந்த ஆண்டு […]
சிறந்த ஆடியோவைத் தரக்கூடிய புளூடூத் இயர்பட்கள், ஹெட்ஃபோன்கள் மற்றும் ஸ்பீக்கர்கள் போன்றவற்றிற்கு தனித்துவம் வாய்ந்த நிறுவனமான போட் (Boat), அதன் புதிய போட் இம்மோர்ட்டல் கட்டானா பிளேடு டிடபிள்யூஎஸ் (BoAt Immortal Katana Blade TWS) என்ற கேமிங் இயர்பட்ஸை இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய இம்மோர்ட்டல் கட்டானா பிளேடு கேமிங் இயர்பட்ஸ்கள் உலோகத்தால் செய்யப்பட்ட ஒரு உறையைக் கொண்டுள்ளன. இதில் இருக்கக்கூடிய கிளைடர் மற்றும் டைனமிக் ஆர்ஜிபி எல்இடி லைட்டுகள் இயர்பட்ஸ்களுக்கு மேலும் அழகைக் […]
பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ரெட்மி, கடந்த அக்டோபர் மாதம் ரெட்மி நோட் 13 சீரிஸில் ரெட்மி நோட் 13, நோட் 13 ப்ரோ மற்றும் நோட் 13 ப்ரோ + என மூன்று ஸ்மார்ட்போன் மாடல்களை வெளியிட்டது. இதைத்தொடர்ந்து, பட்ஜெட் விலையில் ரெட்மி 13சி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. அடுத்ததாக இப்போது, ரெட்மி நோட் 13 ஆர் ப்ரோ (Redmi Note 13R Pro) என்ற புதிய ஸ்மார்ட்போனை வெளியிடத் தயாராகி வருகிறது. இந்த ஸ்மார்ட்போனை பற்றிய […]
பலரும் அறியாத சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான யுனிஹெர்ட்ஸ் (Unihertz), மற்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்களை விட சற்று தனித்துவம் வாய்ந்தது. ஏனென்றால் இந்த நிறுவனம் தயாரிக்கும் ஸ்மார்ட்போன், ஒரு முரட்டுத்தனமான ஸ்மார்ட்போன் ஆகும். இதன் முரட்டுத்தனமான வடிவமைப்பு மற்றும் அதிக திறன் கொண்ட பேட்டரி, இந்த ஸ்மார்ட்போன்களை தனித்து நிற்க வைக்கிறது. அந்தவகையில், யுனிஹெர்ட்ஸ் தற்போது ஓரு புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. யுனிஹெர்ட்ஸ் டேங்க் 3 எனப்படும் இந்த ஸ்மார்ட்போன், நிறுவனத்தின் டேங்க் சீரிஸில் 3 […]
வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில், மக்கள் அனைவரும் கூகுளின் பயன்பாடுகளான ஜிமெயில், யூடியூப், டிரைவ் போன்றவற்றைப் பெருமளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பயன்பாடுகளை அணுகுவதற்கு கூகுள் கணக்கு (Google Account) என்பது கண்டிப்பாகத் தேவைப்படும். எனேவ ஒவ்வொரு நபரும் தனக்கென ஒரு கூகுள் கணக்கை உருவாக்கி கூகுளின் பயன்பாடுகளை பயன்படுத்துகின்றனர். அதிலும் ஒரு சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை உருவாக்கி அதில் சில கணக்குகளை மட்டுமே பயன்படுத்துகின்றனர். இதனால் பல கணக்குகள் செய்யப்படாமல் உள்ளது. வெறும் ரூ.12,500 […]
Redmi 13C: பட்ஜெட் விலையில் சிறந்த பிராசஸர், 50 எம்பி கேமரா மற்றும் 8ஜிபி ரேம் கொண்ட ஒரு பக்காவான ஸ்மார்ட்போனை சியோமி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இத்தகைய அம்சங்கள் கொண்ட புதிய ரெட்மி 13சி ஸ்மார்ட்போன் நைஜீரியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 27ம் தேதி அதன் புதிய சியோமி 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகப்படுத்தியதையடுத்து, புதிய ரெட்மி 13சி ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இது இந்த ஆண்டு ஆரம்பத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி 12சி-ன் தொடர்ச்சி ஆகும். […]
Redmi 13C: ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான சியோமி, கடந்த அக்டோபர் 27ம் தேதி அதன் புதிய சியோமி 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகப்படுத்தியது. இதையடுத்து புதிய ஸ்மார்ட்போனில் வேலை செய்து வந்த சியோமி, அந்த ஸ்மார்ட்போனை விரைவில் வெளியிட உள்ளது. அதன்படி, புதிய ரெட்மி 13சி ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை கடந்த நவம்பர் 3ம் தேதி அதிகாரபூர்வமாக அறிவித்தது. இது ரெட்மி 12சி ஸ்மார்ட்போனில் இருக்கக்கூடிய அம்சங்களை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் உறுதி செய்யப்படவில்லை. இப்போது, அறிமுகத்திற்கு […]
POCO C65 : ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான போகோ (POCO), அதன் சி-சீரிசில் புதிய தயாரிப்பான போகோ சி65 (POCO C65) என்கிற பட்ஜெட் ஸ்மார்ட்போனை உலக அளவில் உள்ள சந்தைகளில் வெளியிட்டுள்ளது. இதில் இருக்கக்கூடிய பிராசஸர் மற்றும் பேட்டரி, இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகமான போகோ சி55 ஸ்மார்ட்போனில் இருப்பது போலவே உள்ளது. ஆனால் கேமரா, ரேம், ஸ்டோரேஜ் அம்சங்கள் ஒத்துப்போகவில்லை. டிஸ்பிளே இதில் 1600×720 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்ட வாட்டர் டிராப் நாட்ச்சுடன் கூடிய […]
தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் முக்கிய பாதுகாப்பு அம்சமான கார் கிராஸ் டிடெக்ஷன் (Car Crash Detection) என்பதை கடந்த 2019ம் ஆண்டில், அறிமுகப்படுத்தியது. இந்த அம்சம் முதலில் அமெரிக்காவில் உள்ள பிக்சல் ஸ்மார்ட்போன் பயனாளர்களுக்கு மட்டுமே கிடைத்தது. ஆனால் இப்போது இந்த அம்சம் இந்தியா உட்பட ஆஸ்திரியா, பெல்ஜியம், போர்ச்சுகல் மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள பிக்சல் பயனாளர்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பயனர்களுக்கு, இந்த பாதுகாப்பு அம்சம் பிக்சல் 4ஏ, 6ஏ, 7, 7 ப்ரோ, […]
iQOO 12 Series: ஐக்யூ (iQOO) நிறுவனம் தனது புதிய ஐக்யூ 12 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்களை நவம்பர் 7ம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்கு மத்தியில் ஐக்யூ 12 ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் வெளியாகும் என ஐக்யூ நிறுவனம் தெரிவித்திருந்தது. தற்போது ஐக்யூ 12-ன் வெளியீட்டுத் தேதியானது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, இந்த புதிய ஐக்யூ 12 ஸ்மார்ட்போன் டிசம்பர் 12ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதோடு இந்த ஃபிளாக்ஷிப் போன் அமேசான் […]
MacBook Pro : ஆப்பிள் நிறுவனம் அதன் ‘ஸ்கேரி ஃபாஸ்ட்’ என்ற அறிமுக நிகழ்வை இன்று நடத்தியது. இந்த நிகழ்வில் 3 என்எம் (3nm) செயல்முறையை அடிப்படையாகக் கொண்ட புதிய எம்3 சிப்புடன் கூடிய மேக்புக் ப்ரோ மாடல்கள் மற்றும் ஐமேக்கையும் அறிமுகப்படுத்தியது. இதில் மேக்புக் ப்ரோவில் எம்3, எம்3 ப்ரோ மற்றும் எம்3 மேக்ஸ் சிப்புகளுடன் கூடிய, இரண்டு டிஸ்ப்ளே அளவு வேறுபாடுடன் கூடிய மூன்று வகைகள் உள்ளன. டிஸ்பிளே இந்த மேக்புக் ப்ரோ ஆனது […]
Vivo Y100 5G : பட்ஜெட் விலையில் பல அம்சங்களைக் கொண்ட ஸ்மார்ட்போன்களை அனைவரும் எதிர்பார்த்து இருக்கும் நேரத்தில், விவோ நிறுவனம் அதன் ஒய் சீரிஸில் விவோ ஒய்100 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதே விவோ ஒய் 100 5ஜி (Vivo Y100 5G) போன் கடந்த பிப்ரவரி 16ம் தேதி இந்தியாவில் அறிமுகமானது. இப்போது இதே மாடல் இந்தியாவில் உள்ள ஒய் 100 5ஜி ஸ்மார்ட்போனை விட வித்தியாசமான வடிவமைப்பு, சிப்செட் மற்றும் பேட்டரி போன்றவற்றில் […]
Techno Pop 8: டெக்னோ மொபைல் நிறுவனம் அதன் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனான டெக்னோ பாப் 7 ப்ரோவை, கடந்த பிப்ரவரி 17ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. இதனைத்தொடர்ந்து, டெக்னோ விரைவில் அதன் பாப் சீரிஸில் டெக்னோ பாப் 8 (Techno Pop 8) என்ற புதிய ஸ்மார்ட்போனை வெளியிட உள்ளது. இந்த டெக்னோ பாப் 8 ஸ்மார்ட்போன் அறிமுகம் குறித்த தகவலை டிப்ஸ்டர் அன்வின், தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதனுடன் டிஸ்பிளே, […]