"ஜியோவிற்கு போட்டியாக களமிரங்கும் வோடபோன்"இலவச சந்தாவை வெளியிட்டு அசத்தல்..!!

ஜியோவின் ஜிகாஃபைபர் சேவைக்கு போட்டியாக வோடபோனின் யு பிராட்பேன்ட் சேவையை பயன்படுத்துவோருக்கு நான்கு மாதங்களுக்கு இலவச சந்தா அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோவின் ஜிகாஃபைபர் சேவைக்கு போட்டியாக வோடபோனின் யு பிராட்பேன்ட் சேவையை பயன்படுத்துவோருக்கு நான்கு மாதங்களுக்கு இலவச சந்தா அறிவிக்கப்பட்டுள்ளது.

unknown node

யு பிராட்பேன்ட் சேவையை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் 12 மாதங்களுக்கு தங்களது திட்டத்தை அப்கிரேடு செய்யும் போது நான்கு மாதங்களுக்கு கூடுதல் வேலிடிட்டி இலவசமாக வழங்கப்படுகிறது. அந்த வகையில் நான்கு மாதங்கள் இலவச சேவையை பெற முடியும்.

ஆண்டு சந்தாவுக்கான கட்டணத்தை மட்டும் செலுத்தி மொத்தம் 16 மாதங்களுக்கு சேவைகளை பயன்படுத்த முடியும். இதே போன்று காலாண்டு அல்லது அரையாண்டு வரை திட்டங்களை ரீசார்ஜ் செய்வோருக்கும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை செப்டம்பர் 30-ம் தேதி வரை வழங்கப்படுகிறது.

unknown node

மேலும் இலவச சேவையை பெற வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் யு பிராட்பேன்ட் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ரீசார்ஜ் செய்ய வேண்டியது அவசியம் ஆகும். ஏற்கனவே ஒரு மாத திட்டத்தை பயன்படுத்தும் பயனர்கள் மூன்று மாதங்களுக்கு கட்டணம் செலுத்தும் போது ஒரு மாதம் இலவசமாகவும், ஆறு மாதங்களுக்கான திட்டத்திற்கு இரண்டு மாதங்கள் மற்றும் பன்னிரெண்டு மாதங்களுக்கு நான்கு மாதங்கள் இலவச சேவை வழங்கப்படும் என யு பிராட்பேன்ட் அறிவித்துள்ளது.

unknown node

தற்சமயம் காலாண்டு திட்டத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளரால் ஆறு மாதங்கள் அல்லது பன்னிரெண்டு மாதங்களுக்கான திட்டங்களை மட்டுமே ரீசார்ஜ் செய்ய முடியும். இதேபோன்று அரையாண்டு திட்டத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பன்னிரெண்டு மாத திட்டத்திற்கு அப்கிரேடு செய்து கொள்ளலாம்.

DINASUVADU