USB-C Adapter : என்னது இந்த அடாப்டரின் விலை இவ்வளவா? ஆப்பிளின் செயலால் அதிர்ச்சியடைந்த பயனர்கள்.!

USB-C to Lightning Adapter

ஆப்பிள் நிறுவனம் நேற்று முன்தினம் நடந்த “வொண்டர்லஸ்ட்” என்ற நிகழ்வில் தனது புதிய ஐபோன் 15 சீரிஸ் (IPhone15 Series) ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. அதோடு, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9, மற்றும் ஏர்போட்ஸ் ப்ரோ 2வது ஜென் உட்பட பல புதிய தயாரிப்புகளை அறிவித்தது.

இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் ஆப்பிள் அறிமுகப்படுத்திய இந்த சாதனங்களில் , மற்ற ஐபோன்களில் இருப்பது போல அல்லாமல் ஆன்ட்ராய்டு போன்களில் இருக்கக்கூடிய யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட் உள்ளது. இந்த புதிய அம்சம் ஸ்மார்ட்போன் அறிமுகத்திற்கு முன்னதாகவே பயனர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை பெற்றது.

இதனை இன்னும் மேம்படுத்தும் விதமாக யூஎஸ்பி டைப்-சி லைட்னிங் அடாப்டரையும் ஆப்பிள் அறிமுகம் செய்துள்ளது. இதனால் என்ன பயன் என்று பார்த்தால் உங்களிடம் ஐபோனின் லைட்னிங் சார்ஜிங் கேபிள் உள்ளது. ஆனால் நீங்கள் புதிய ஐபோன் 15 சீரிஸ் ஸ்மார்ட்போனை வாங்க போகிறீர்கள் என்றால், இந்த கேபிள் உங்களுக்கு எந்தப் பயனும் இல்லை.

இந்த கேபிளை பயனுள்ளதாக மாற்ற, இந்த யூஎஸ்பி டைப்-சி லைட்னிங் அடாப்டர் உதவியாக இருக்கும். இதில் ஒருபுறம் யூஎஸ்பி டைப்-சி பின்னும், மறுபுறம் வழக்கமான ஐபோன் சார்ஜரை செருக்கும் இடமும் இருக்கும். இதில் உங்கள் பழைய கேபிளை சொருகி, யூஎஸ்பி டைப்-சி போர்ட்டில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதில் பயனர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடியது என்னவென்றால் யூஎஸ்பி டைப்-சி லைட்னிங் அடாப்டரின் விலை. ஏனெனில் இதன் விலையானது ஆன்லைனில் ரூ.2,900 ஆகும். ஆனால் சாதாரண யூஎஸ்பி டைப்-சி கேபிள் விலை இதைவிட மிகக்குறைவு. இதனால் ஆப்பிள் பயனர்களுக்கு சமூக ஊடகமான எக்ஸ் தாளத்தில் தங்களது அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி, எக்ஸ் பயனர் ஒருவர், “ஆப்பிள் யூ.எஸ்.பி-சிக்கு மாறுகிறது. லைட்னிங் டு ஹெட்ஃபோன் ஜாக் அடாப்டர் $9 ஆக இருந்தது. இப்போது லைட்னிங் டு யுஎஸ்பி-சி டாங்கிளுக்கு நீங்கள் $29 செலுத்த வேண்டும். ஒருவேளை நீங்கள் புதிய யூஎஸ்பி டைப்-சி கேபிள்களை வாங்க விரும்பினால் கவலையில்லை. அவை மிகவும் மலிவான விலையில் உள்ளது.” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், மற்ற நிறுவனங்களின் யூஎஸ்பி டைப்-சி கேபிள்கள் ஐபோன் 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு  சரியாக வேலை செய்யுமா என்பதும், ஆப்பிளின் கேபிள்களைப் போன்ற வேகத்தை வழங்குமா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. நீங்கள் ஐபோன் 15 சீரிஸ் ஸ்மார்ட்போனை வாங்க போகிறீர்கள் என்றால், புதிய கேபிளைப் பெறுவது பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

ஏனென்றால் இந்த ஸ்மார்ட்போனை நீங்கள் வாங்கும்பொழுதே யூஎஸ்பி டைப்-சி கேபிள் தரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்