அமெரிக்காவில் பாட்டியின் பென்ஸ் காரை எடுத்துக்கொண்டு, 11 வயது சிறுவன் பார்க்கிற்கு வந்து தன் பாட்டியை காரில் வீட்டிற்கு அழைத்து சென்று, தனது வீட்டில் உள்ள பாட்டிக்கான மாத்திரையை கொடுத்து, அவரை காப்பாற்றியுள்ளான்.
அமெரிக்காவில் உள்ள இன்டியனாபொலிஸ் சிட்டியில் வசித்து வரும் ஏஞ்சலினா எனும் பெண் தனது வீட்டிற்க்கு அருகில் உள்ள பூங்காவில் உடற்பயிற்சி செய்துவந்துள்ளார்.
அப்போது, அவருக்கு உடலில் சர்க்கரை அளவு குறைவானதால் படபடப்பு வந்து அங்கே மயங்கி விழுந்துள்ளார். அப்போது அருகில் விளையாடி கொண்டிருந்த ஏஞ்சலீனாவின் 11 வயது பேரன் பி.ஜே.பிரீவர் தனது பாட்டியின் நிலை கண்டு, உடனே தன் வீட்டிற்கு விரைந்துள்ளான்.
அங்கே பாட்டியின் பென்ஸ் கார் இருந்துள்ளது. அதனை எடுத்துக்கொண்டு, இந்த 11 வயது சிறுவன் பார்க்கிற்கு வந்து தன் பாட்டியை காரில் வீட்டிற்கு அழைத்து சென்று, தனது வீட்டில் உள்ள பாட்டிக்கான மாத்திரையை கொடுத்து, அவரை காப்பாற்றியுள்ளான்.
11 வயது சிறுவனுக்கு ஓட்டுநர் உரிமம் இல்லையென்றாலும், ஆபத்தில் இருந்த தன் பாட்டியை காப்பாற்ற அச்சிறுவனின் பெரு முயற்சி அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…