எமிரேட்ஸ் நிறுவனத்தின் 30,000 ஊழியர்கள் வெளியேற்றமா.?

எமிரேட்ஸ் குழுமத்தின் 30 விழுக்காட்டு ஊழியர்கள் பணியில் இருந்து நீக்க முடிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக உலக நாடுகள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், ரயில் விமான மற்றும் பேருந்துப்போக்குவரத்து சேவைகள் மூடப்பட்டன. இதனால், 70 சதவீதம் உலகின் விமானப் போக்குவரத்து முடங்கியது.
இந்நிலையில், பயணிகள் மூலம் கிடைக்கும் 314 பில்லியன் டாலர் இழப்பை சந்திக்க நேரிடும் என சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் தெரிவித்திருந்தது. இதைதொடர்ந்து , எமிரேட்ஸ் விமான நிறுவனம் ஊரடங்கால் முடங்கியதை அடுத்து வருமானத்தை இழந்ததால், அந்த வருமானத்தை ஈடுகட்ட ஏ380 விமானங்களை மேலும் சில வருடங்கள் இயக்குவதற்கும் எமிரேட்ஸ் திட்டமிட்டிருந்தது.
மேலும், 1 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்ட எமிரேட்ஸ் குழுமத்தின் 30 விழுக்காட்டு ஊழியர்கள் பணியில் இருந்து நீக்க முடிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் ஆட்குறைப்பு பற்றி எந்தவித தகவலோ, அறிவிப்போ எமிரேட்ஸ் நிறுவனத்தின் தரப்பில் இருந்து ஊழியர்களுக்கு செல்லவில்லை என்றும் கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025