இலங்கையில் 8-வது குண்டு வெடிப்பு ! 150 பேருக்கு மேல் பலி!

THis news gives information about -8th blast in Sri Lanka killed over 150

இன்று  ஈஸ்டர் பண்டிகையை யொட்டி உலகம் முழுவதும்  பல தேவாலயத்தில் நடைபெற்று சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இலங்கையில் உள்ள பல தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது.

அப்போது நான்கு தேவாலயத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு நடந்தது.இந்த குண்டு வெட்டிப்பில் பல கிறிஸ்துவர்கள் படுகாயம் அடைந்தனர். பலர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.

இலங்கையில் உள்ள  கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயத்திலும், கட்டுவப்பிட்டிய தேவாலயம் , கிங்ஸ் பெரி தேவாலயம், பட்டிகலோயா ஆகிய தேவாலயங்களில் ஒரே நேரத்தில் குண்டு வெடித்தது.

இந்நிலையில் இலங்கையின் தெமட்டகொடாவில் குடியிருப்பு பகுதியில் 8-வது குண்டு வெடித்து.இதற்கிடையில் ஏற்கனவே 7 இடங்களில் குண்டு வெடித்ததில் 150 -க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர். மேலும் 500-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக உதவிகள் மற்றும் தகவல்களை பெறுவதற்கு +94777903082 +94112422788 +94112422789 என்ற எண்களை தொடர்பு கொள்ளுமாறு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது.

இலங்கையில் இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.