சீனாவில் நடைபெறும் மனித உரிமை மீறல் குறித்து, ஐ.நா.,வில், 39 நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவில், ஐக்கிய நாடுகள் பொது சபையின் மனித உரிமைகள் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட, 39 நாடுகள் ஒன்றிணைந்து வெளியிட்ட அறிக்கையை, ஐக்கிய நாடுகளுக்கான ஜெர்மனியின் நிரந்தர துாதர், கிறிஸ்டோப் ஹெஸ்கன் வாசித்தார். அதில், சீனா, சிறுபான்மையினர் மீது நடத்தும் மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் கவலை அளிக்கின்றன. குறிப்பாக, ஜிங்ஜியாங் மாகாணத்தில், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட உய்குர் முஸ்லிம்கள், முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு, அரசியல் ரீதியாக மூளைச்சலவை செய்யப்படுகின்றனர். இதற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. சுதந்திரமாக மத வழிபாடுகளை மேற்கொள்வதற்கும், வெளியில் நடமாடு வதற்கும், ஒன்று கூடி பேசுவதற்கும், பேச்சுரிமைக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இது, உய்குர் கலாசாரத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல்.மேலும், அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, உய்குர் மற்றும் இதர சிறுபான்மையினரின் நடமாட்டங்கள் கண்காணிக்கப்படுகின்றன. அதேபோல் கட்டாயக் கருத்தடை, குடும்பக் கட்டுப்பாடு, கொத்தடிமைகளாக்குவது போன்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, ஏராளமான அறிக்கைகள் வெளியாகியுள்ளன. அதேபோல, திபெத்திலும், சிறுபான்மையினருக்கு எதிராக, சீனா மனித உரிமை மீறல்களை நடத்தியுள்ளது. இது, பிரிட்டனுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு எதிரானதாகும். இத்தகைய மனித உரிமை மீறல்களை சீனா நிறுத்திக் கொள்ள வேண்டும்.
ஜிங்ஜியாங் மாகாணத்தில் உள்ள உய்குர் மக்களின் நிலையை நேரில் கண்டறிய, ஐ.நா., மனித உரிமைகள் குழு தலைவர், மிச்சல் பேச்லட் தலைமையிலான குழுவிற்கு, சீனா அனுமதி அளிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை வாசிக்கப்பட்டதும், 55 நாடுகள் சார்பாக, சீனாவிற்கு ஆதரவான அறிக்கையை, பாக்கிஸ்தான் வெளியிட்டது. அதில், ‘ஹாங்காங் பிரச்னை, சீனாவின் உள்நாட்டு விவகாரம் என்பதால், அதில் பிற நாடுகள் தலையிடக் கூடாது’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவும், மேற்கத்திய நாடுகளின் அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்து உள்ளது.
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…