ஆப்கானில் இருந்து விமானத்தில் தொங்கியபடி தப்ப முயன்று கீழே விழுந்து இறந்தவர்களில் அந்நாட்டின் கால்பந்து வீரர் ஜக்கி அன்வாரியும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், பலர் அங்கிருந்து வெளியேறுவதற்காக விமான நிலையங்களில் குவிந்தனர்.இதனையடுத்து,நகர பேருந்துகளில் ஏறுவதற்கு முயற்சிப்பது போல், விமானத்தில் ஏறுவதற்கு முயற்சித்து வரும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.
இதேபோல்,அமெரிக்க ராணுவத்திற்கு சொந்தமான விமானத்தில் இடம் கிடைக்காத நிலையில், விமான சக்கரத்தில் தொங்கியபடி சிலர் ஆபத்தான பயணம் செய்துள்ளனர்.விமானம் உயரே பறந்த நிலையில், பிடிமானத்தை இழந்த 3 பேர் வானில் இருந்து கீழே குடியிருப்பு பகுதியில் விழும் வீடியோக்கள் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி பேரதிர்ச்சியை உண்டாக்கின.
இந்நிலையில்,ஆப்கானில் இருந்து விமானத்தில் தொங்கியபடி தப்ப முயன்று கீழே விழுந்து இறந்தவர்களில் அந்நாட்டின் இளம் கால்பந்து வீரர் ஜக்கி அன்வாரியும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜக்கி அன்வாரி,காபூல் விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய யுஎஸ்ஏஎஃப் போயிங் சி -17 இலிருந்து விழுந்ததாகவும், அவரது மரணத்தை விளையாட்டுக்கான பொது இயக்குநரகம் உறுதி செய்துள்ளதாகவும் ஆப்கானிஸ்தான் செய்தி நிறுவனம் அரியானா நேற்று தெரிவித்துள்ளது.அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
19 வயதான இவர் ஆப்கானிஸ்தான் தேசிய அணிக்காக கால்பந்து விளையாடியவர் என்பது குறிப்பிடதக்கது.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…