செம மாஸ்… தளபதி 65 படத்தின் அட்டகாசமான போஸ்டர்..!

தளபதி 65 படத்திற்கான ரசிகர்கள் எடிட் செய்த போஸ்டர் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தளபதி விஜய் மாஸ்டர் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் தனது 65-வது படத்தில் நடிக்கவுள்ளார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்கவுள்ளார் . மேலும் நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் பணியாற்ற உள்ளார் . மேலும் தளபதி-65 படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணியாற்ற உள்ளதாக அவரே அதிகாரப்பூர்வமாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.
மேலும் ‘தளபதி65’ படத்தில் பிரபல காமெடி நடிகர்களான யோகி பாபு மற்றும்VTV கணேஷ் ஆகியோரும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.மேலும் தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே அல்லது ரஷ்மிகா மந்தானா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.ஆனால் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து ரஷ்யாவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது இந்த படத்திற்கான ரசிகர்கள் எடிட் செய்த போஸ்டர் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Here is my next #Thalapathy65 Conceptual Design for you guys ????!
I hope that you guys like it & please let me know your feedback because it means everything to me ????❤️!#Master
HD (Downloadable Link) : https://t.co/bcOpHY7shc pic.twitter.com/2ImkCroDf1
— Mohammed Ihlas (@MohammedIhlas3) March 1, 2021