ஹீரோவாக அறிமுகமாகும் பிக்பாஸ் முகின்.! ஹீரோயின் யார் தெரியுமா.?

பிக்பாஸ் முகின் தனது முதல் படத்தை அஞ்சனா அலிகான் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆல்பம் பாடல்கள் மூலம் ரசிகர்களின் மனதை வென்றவர் முகின் ராவ். அதனையடுத்து பிக்பாஸ் சீசன் 3 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான முகேன் அதன் டைட்டிலையும் தட்டி சென்றார். இந்த நிலையில் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில் அவரது முதல் படத்தினை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தினை நானி மற்றும் நித்யா மேனன் நடித்த வெப்பம் படத்தினை இயக்கிய அஞ்சனா அலிகான் இயக்கவுள்ளார். இந்த படத்தில் முகினுக்கு ஜோடியாக திவ்யபாரதி நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. இவர் ஜி. வி. பிரகாஷூடன் பேச்சிலர் என்ற படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. லாக்டவுன் முடிந்ததும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தி முகின் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025