தமிழ் திரைப்படங்களை வறுத்தெடுத்த ப்ளூ சட்டை மாறனின் முதல் படம்! விரைவில் திரையில்!

- தமிழ் சினிமா விமசகர்களில் தனது விமர்சனம் மூலம் தெரிந்த முகமாகியிருப்பவர் ப்ளூ சட்டை மாறன்.
- இவர் தனது இயக்கத்தில் முதல் படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார்.
தமிழ் திரைப்பட விமர்சகர்கள் மூலம் இணையதளவாசிகள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தமிழ் டாக்கீஸ் ப்ளூ சட்டை மாறன். இவரது நெகடிவான விமர்சனத்தை பார்க்கவே ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பர்.
தற்போது இவர் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். இவர் இயக்கியுள்ள இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். சுரேஷ் காமாட்சி தான் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தையும் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.
புதுமுகங்களை வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் ஷூட்டிங் நேற்றுடன் முடிவடைந்தது. இன்னும் இப்படத்திற்கு பெயர் வைக்கவில்லை. விரைவில் இப்படம் பற்றிய அடுத்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!
July 11, 2025
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025