விண்வெளியில் உள்ள அதிசயங்களில் ஒன்றான ‘கருந்துளையின்’ பல வளையங்கள்(மல்டி பேண்ட்)கொண்ட புகைப்படத்தை சீன விஞ்ஞானிகள் வெளியிட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா,பல வருடங்களாக விண்வெளி ஆராய்ச்சியில் மர்ம முடிச்சாக இருந்து வந்து கருந்துளை(black hole)யினைக் கண்டுபிடித்து அதன் புகைப்படத்தை முதல் முறையாக 2019 ஆம் ஆண்டு வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து,சீன விஞ்ஞானிகள் கருந்துளையினைச் சுற்றி ‘பல வளையங்கள்'(மல்டி பேண்ட்) இருக்கும் புகைப்படத்தினை சமீபத்தில் வெளியிட்டுள்ளனர்.
இந்த புகைப்படத்தில்,கருந்துளையின் மையப் பகுதியானது கருப்பு நிறத்திலும்,அதனைச் சுற்றியுள்ள வளையமானது ஆரஞ்சு நிறத்திலும் உள்ளது.மேலும், மஞ்சள் நிற வெப்பமான வாயுக்களும் இடம் பெற்றுள்ளன.இந்த கருந்துளையினை, சீனாவின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கியான ‘தியான்மா’ படம் பிடித்துள்ளது.
கருந்துளையானது,பூமியிலிருந்து சுமார் 55 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவிலும்,சூரியனை விட 6.5 பில்லியன் மடங்கு பெரியதாகவும் இருப்பதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…