பெப்சி தொழிற்சாலையில் பணிபுரிபவருக்கு கொரோனா.! பணியை நிறுத்திய பெப்சி நிறுவனம்.!

Default Image

உணவு மற்றும் குளிர்பான நிறுவனமான பெப்சி தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பெப்சி நிறுவனம் தனது பணியை நிறுத்தி வைத்துள்ளது.

சீனாவில் இருந்து முதலில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளதால், இந்ந வைரஸை அழிப்பதற்கு உலக நாடுகள் இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.

சமீபத்தில், சீன தலைநகரான பெய்ஜிங்கில் புதிதாக 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அங்குள்ள உணவு மற்றும் குளிர்பான நிறுவனமான பெப்சி தொழிற்சாலையில் பணிபுரியும்  ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர்.

இந்த பரிசோதனை அடுத்து பெப்சி தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பெப்சி நிறுவனம் தனது பணியை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
scattered missile parts
Indian Army Pulverizes Terrorist Launchpads
Virat Kohli - TEST Cricket
Vikram Misri
Volunteers for INDIAN ARMY
Sofiya Qureshi