அமைச்சருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து தன்னை தானே சுய தனிமை படுத்திகொண்ட மலேசிய பிரதமர்.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் உலகம் முழுவதிலும் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், பல இடங்களில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், முதல்வர், பிரதமர் என முக்கியமான அரசியல்வாதிகளுக்கும் இந்த கொரானாவின் தாக்கம் அதிகளவில் பரவி வருகிறது. இந்நிலையில் மலேசியாவில் உள்ள விவகாரத்துறை அமைச்சர் சுல்ஃகிப்லி முகமது அல் பக்ரி அவர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து கடந்த மூன்றாம் தேதி விவகாரத் துறை அமைச்சருடன் கூட்டத்தில் கலந்துகொண்ட மலேசிய பிரதமர் முகைதின் யாசின் அவர்கள் அமைச்சருக்கு கொரானா என்றதும் தானும் பரிசோதனை செய்து பார்த்து உள்ளார். ஆனால் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் தன்னை 14 நாட்களுக்கு சுய தனிமைப் படுத்திக் கொள்வதாக பிரதமர் முகைதீன் அவர்கள் அறிவித்துள்ளார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…