“இன்னும் ஒரு சில வாரங்களில் கொரோனா தடுப்பூசியை அறிமுகம்!”- அதிபர் டிரம்ப்

அமெரிக்காவில் இன்னும் ஒரு சில வாரங்களில் கொரோனா தடுப்பூசியை அறிமுகம் செய்யவுள்ளதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சீனாவில் பரவதொடங்கிள கொரோனா வைரஸின் தாக்கம், உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் நோக்கில் பல உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
அதில் சில நாடுகளில் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, மனிதர்கள் மீதான சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், கொரோனாவை கட்டுப்படுத்த அமெரிக்கா, “அஸ்ட்ரா ஜெனிகா” என்ற மருந்தை கண்டுபிடித்துள்ளது.
அந்த மருந்து, 3- ம் கட்ட பரிசோதனையை எட்டியுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ள நிலையில், தற்பொழுது கொரோனா தடுப்பு மருந்து நெருங்கிவிட்டதாக கூறியா அவர், மருந்து இன்னும் ஒரு சில வாரங்களில் தடுப்பூசியை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், இதற்கு முந்தைய அரசாக இருந்தால் கொரோனா தடுப்பு மருந்தை கொண்டுவருவதில் பல ஆண்டுகாலம் எடுத்திருப்பதாகவும், ஆனால் தன்னுடைய அரசு விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.