,

130 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி அறவே கிடைக்கவில்லை – ஐ.நா பொதுச்செயலாளர்!

By

கொரோனா தடுப்பூசி 130 நாடுகளுக்கு அறவே கிடைக்கவில்லை என ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ அவர்கள் கூறியுள்ளார்.

உலகம் முழுவதிலும் பரவி வரக்கூடிய கொரோனா வைரஸுக்கு எதிராக பல்வேறு நாடுகளில் தடுப்பூசி கண்டறியப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்தியாவில் இரண்டு தடுப்பூசிகளும் மற்ற பிற நாடுகளில் ஆங்காங்கு கண்டறியப்பட்டுள்ள தடுப்பூசிகள் சிலவற்றிற்கும் பல்வேறு பரிசோதனைகளுக்கு பின் அனுமதி கொடுக்கப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தடுப்பூசி கண்டறியாத சில நாடுகளுக்கு கண்டறிந்த நாடுகள் உதவியும் வருகின்றன. இந்நிலையில் ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ அவர்கள் இது குறித்து விமர்சித்துள்ளார். அதாவது கொரோனா தடுப்பூசி 130 நாடுகளுக்கு ஒரு டோஸ் கூட கிடைக்காமல் இருக்கிறது எனவும், 75% கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை 10 பிற நாடுகளுக்கு நாடுகள் வழங்கி உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். இது போன்ற கடினமான காலகட்டத்தில் அனைவர்க்கும் சமமாக தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Dinasuvadu Media @2023