மீன்களின் பேக்கேஜில் கொரோனா வைரஸ் உறுதி! ஒரு வாரத்திற்கு இறக்குமதிக்கு தடை!

சீனாவில் மீன்களின் பேக்கேஜில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸானது முதலில் சீனாவின் வுகாண் மாகாணத்தில் தான் உருவானது. இதனை தொடர்ந்து, இந்த வைரஸானது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்நிலையில், சீனாவில் ஈக்வடார் கடல் உணவு தயாரிப்பு நிறுவனமான, பயர்ஸ்பா நிறுவனத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட, மீன்களின் பேக்கேஜில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சீன சுங்க அதிகாரிகள், அந்த நிறுவனத்திலிருந்து மீன்களை இறக்குமதி செய்ய, ஒரு வாரத்திற்கு தடை விதித்துள்ளனர். மேலும், உறைந்த உணவு பொருட்களில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டால், ஒரு வாரத்திற்கு அந்த பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படும் என்றும், மூன்றாவது முறை அல்லது அதற்கு மேல் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டால், ஒரு மாதத்திற்கு தடை விதிக்கப்படும் என்று சீன சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!
July 17, 2025
எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!
July 17, 2025