கொரோனா 100 மில்லியன் மக்களை தீவிர வறுமையில் தள்ளக்கூடும் – அன்டோனியோ குடரெஸ்

கொரோனாவால் உலகளவில் இறப்பு எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியுள்ளது, மொத்த கொரோனா எண்ணிக்கை இப்போது 14 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது. இந்தியா ஒரு மில்லியனுக்கும் அதிகமான கொரோனா எண்ணிக்கை பதிவு செய்த உலகின் மூன்றாவது நாடாக இடத்தில உள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில், இதுவரை கொரோனாவால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,429,382 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 6,04,963 பேர் உயிரிழந்துள்ளனர். 8,620,954 பேர் குணமாகி வீடு திரும்பியுமுள்ளனர்.
140,103 பேர் கொரோனா இறப்புகளால் அமெரிக்கா மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் பிரேசில் (78,772), பிரிட்டன் (45,273), மெக்ஸிகோ (38,888) மற்றும் இத்தாலி (35,042) ஆக உள்ளது. கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுடன் தொடர்புடைய இறப்புகளின் எண்ணிக்கை இரண்டு மாதங்களுக்குள் இரு மடங்காக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூன் 28 முதல் மூன்று வாரங்களில் 100,000 க்கும் மேற்பட்ட புதிய இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் தொற்று 100 மில்லியன் மக்களை தீவிர வறுமையில் தள்ளக்கூடும் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் நேற்று தெரிவித்தார்.