உலகின் முக்கிய கோடீஸ்வரரும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவருமான பில்கேட்ஸ் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே உலக மக்களை எச்சரித்திருந்தார். அதில், அடுத்த பத்து ஆண்டுகளில் உலகளாவிய பேரழிவு போரினால் இருக்காது என்றும், பல கோடி மக்களை நுண்ணுயிரி கொன்று குவிக்கும் என்றும் அவர் கூறியிருந்தார். அடுத்த தொற்றுநோயை எதிர்கொள்வதற்கு தயாராக தவறினால், எபோலாவைவிட அழிவு மிகவும் அதிகமாக இருக்கும் என்று கூறியிருந்தார். அப்போது பில்கேட்ஸ் கணித்தது தற்போது உண்மையாகியுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்துகளை உருவாக்குவதற்கும், நோய் கண்காணிப்பு முறைகளை உருவாக்குவதற்கும் விரைவான வழிகளைக் கண்டறிய பல கோடி ரூபாய் வரை செலவு செய்து வருகிறார் பில்கேட்ஸ். இந்நிலையில் கோடீஸ்வரர் பில்கேட்ஸ் சமீபத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, ‘புதிய தொற்றுநோயின் ஆபத்து குறித்து உலக மக்களை முங்கூட்டியே எச்சரிப்பதில், நான் இன்னும் அதிக கவனம் செலுத்தியிருக்க வேண்டும். அப்போது மிகவும் அழுத்தி சொல்லாதது எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது. கொரோனா தடுப்பு மருந்து மற்றும் சிகிச்சை தொடர்பான மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு, பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் ஊதியம் வழங்குகிறது. இந்த மருந்தை ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்தவுடன் அவற்றை விநியோகிக்க தயார் நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…