சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். தயாரிப்பு நிறுவனமான லைகா இப்படத்தை பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு கொண்டுவர உள்ளது.
இப்படத்தில் அனிருத் இசையமைத்துள்ளார். இப்பட பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி அண்மையில் பிரமாண்டமாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து, பாடல்கள் வெளியானது. ஆனால், கண்ணுல திமிரு எனும் பாடல் வெளியாக வில்லை. இந்த பாடலில் அண்ணாமலை படத்தின் இசை கோர்க்கப்பட்டுள்ளதாம். இந்த பாடல் இசை கோர்ப்பு பணிகளை இசையமைப்பாளர் தேவாவும் செய்துள்ளார். அண்ணாமலை படத்தின் இசை பயன்படுத்தப்பட்டுள்ளதால் டிவோ, லஹாரி நிறுவனங்களிடம் அனுமதி பெற்றுத்தான் வெளியிட உள்ளதாம்.
இந்த பாடலை 4 திருநங்கைகள் சேர்ந்து பாடியுள்ளனராம். இந்நிலையில் இசையமைப்பாளர் தேவாவுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து இது என் வாழ்வில் மறக்கமுடியாத தருணம் என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் தர்பார் இசையமைப்பாளர் அனிருத்.
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…
சென்னை : குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக தங்கியுள்ள பாகிஸ்தான் பங்களாதேஷை சேர்ந்தவர்களை வெளியேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும் பயங்கரவாத தாக்குதலை…