சுருளியின் மிரட்டல்… சூரரைப்போற்று சாதனையை மாஸாக முறியடித்த ஜகமே தந்திரம்..!

சூர்யாவின் சூரரைப்போற்று படத்தின் டீசர் சாதனையை தனுஷின் ஜகமே தந்திரம் டீசர் முறியடித்துள்ளது.
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ளார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை y not studios தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் கலையரசன் மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், “நெட்பிளிக்ஸ்” ஓடிடி தளத்தில் விரைவில் ரிலீஸாக உள்ளது. இதற்கான டீசர் கடந்த 22 ஆம் தேதி வெளியானது. வெளியான நாளிலிருந்து தற்போது வரை ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகின்ற நிலையில், சூர்யா நடிப்பில் அமேசான் பிரேமில் வெளியான சூரரைப்போற்று படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.
ஆம் ஜகமே தந்திரம் டீசர் வெளியாகி 3 நாட்களில் யூடியூபில் 9 மில்லியணிற்கும் மேல் பார்வையாளர்களையும், 524k லைக்குகளை பெற்றுள்ளது. சூர்யாவின் சூரரைப்போற்று படத்தின் டீசர் வெளியான 3 நாட்களில் 7 மில்லியன் பார்வையாளர்களையும் 518k லைக்குகளை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
‘நிறைபுத்தரிசி’ பூஜை…சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு!
July 29, 2025
ஆபரேஷன் சிந்தூர் விவாதம் : இன்று மாலை பிரதமர் மோடி உரை?
July 29, 2025