சிக்ஸர் படத்திற்கு வந்த பிரச்சனை போல டிக்கிலோனாவிற்கும் வந்துவிடுமோ?!

வைபவ் நடிப்பில் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் சிக்ஸர். இந்த படத்தை புதுமுக இயக்குனர் சாச்சி என்பவர் இயக்கியிருந்தார். இப்படத்தை வைபவ் மாலைக்கண் வியாதி உள்ள ஒருவராக நடித்திருந்தார். ரிலீஸ் சமயத்தில் நடிகர் கவுண்டமணியின் புகைப்படத்தையும் பெயரையும் தவறாக படத்தில் பயன்படுத்தியதாக கூறி புகார் எழுந்தது.
தற்போது நடிகர் சந்தானம் அடுத்ததாக நடிக்க உள்ள திரைப்படத்திற்கு டிக்கிலோனா எனும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சந்தானம் முதன்முறையாக மூன்று வேடங்களில் நடிக்க உள்ளார். இப்படத்தின் தலைப்பு டிக்கிலோனா என்பது ஜென்டில்மேன் படத்தில் கவுண்டமணி செந்தில் காமெடி காட்சியில் வரும் ஒரு விளையாட்டின் பெயர் ஆகும். அதனால் படத்தின் ரிலீஸ் சமயத்தில் சிக்சர் படம் போல இதற்கும் பிரச்சனை வருமோ என்று தற்போது கோலிவுட்டில் பேசி வருகின்றனர்.