ஜி. வி பிரகாஷ் நடித்து இசையமைக்கும் ஜெயில் படத்தின் செக்கன்ட் சிங்கிள் விரைவில் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளார்.
கிரிக்ஸ் சினி கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரிப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ஜெயில். இந்த படத்தில் ஜிவி நடித்து இசையமைத்துள்ளார்.மேலும் அபர்னாதி, ராதிகா சரத்குமார், யோகிபாபு, ரோபோ சங்கர், பிரேம்கி அமரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
சமீபத்தில் கூட இந்த படத்திலுள்ள ‘காத்தோடு காத்தானேன் ‘ என்ற தனுஷ் மற்றும் அதிதி ராவ் ஹைத்ரி பாடியுள்ள பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் தற்போது பிரண்ஷிப் டேய் ஸ்பெஷலாக ஜி. வி. பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் ஜெயில் படத்தின் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் ‘பத்து காசு இல்லன்னாலும் பணக்காரண்டா, என் செத்து சுகம் எல்லாமே என் நண்பன் தானேடா என்ற வரிகளை தந்த தெருக்குறள் அறிவு அவர்களுக்கு நன்றி என்றும், ஜெயில் படத்தின் செக்கன்ட் சிங்கிளான பிரண்ஷிப் பாடலை விரைவில் வெளியிடவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
ஜார்ஜியா : திவ்யா தேஷ்முக் மகளிர் செஸ் உலகக் கோப்பையை (FIDE Women’s World Cup 2025) வென்று முதல்…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே ஹர்வான் பகுதியில் உள்ள தச்சிகாம் காட்டில், 'ஆப்ரேஷன் மகாதேவ்' என்ற பெயரில்…
டெல்லி : அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த விவாதத்தைத் தொடங்கி வைத்தார். ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து…
மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம், கடந்த…
சென்னை : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ககன்யான் திட்டத்தின் கீழ் 2027 மார்ச் மாதத்தில் முதல் மனிதர்களை…