பிரான்ஸ் அரசாங்கத்துக்கு 118 மில்லியன் வரியாக ஃபேஸ்புக் செலுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் அரசாங்கம் கடுமையான வரி விதிப்பு விதிமுறைகளை அண்மைக் காலங்களாக கடைபிடித்து வருகிறது. முக்கியமாக, பேஸ்புக் கூகுள், ஆப்பிள், அமேசன் போன்ற மிகப்பெரிய தொழில் நுட்பம் சார்ந்த நிறுவனங்களிடம் அவர்களது லாபத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை அரசுக்கு வரியாக செலுத்த வேண்டும் என பிரான்ஸ் தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த பத்து வருட கணக்கீடு மற்றும் அபராதம் ஆகியவை சேர்த்து ஃபேஸ்புக் மட்டும் பிரான்ஸ் அரசுக்கு 118 மில்லியன் டாலர்களை வரியாக செலுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது குறித்து கூறிய பேஸ் புக் செய்தி தொடர்பாளர், 2008 முதல் 2018 ஆம் ஆண்டுக்கான வாரியாக 606 மில்லியன் யூரோக்கள் செலுத்தவேண்டும் என பிரான்ஸ் அதிகாரிகள் வரி தணிக்கை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் பிரான்சுடன் ஒப்பந்தங்கள் குறித்த தகவல்களை ஃபேஸ்புக் செய்தி தொடர்பாளர் அதிகமாக தெரிவிக்கவில்லை. என்றாலும், பிரான்ஸ் கணக்கீட்டின்படி 2019 ஃபேஸ்புக்கின் வருமானம் அதன் முந்தைய ஆண்டுகளைவிட இரட்டிப்பாகியுள்ளது. 747 யூரோக்கள் வருமானம் ஈட்டி உள்ளதாகவும் இந்த கணக்கீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…