இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், மார்ச் 27, 2020 க்குப் பிறகு மிகக் குறைவாக தொற்று பதிவாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் முதலில் சீனாவில் தான் பரவத் தொடங்கியது. அதனை தொடர்ந்து இந்த தொற்றானது உலக நாடுகள் முழுவதிலும் தனது தீவிர தாக்குதலை நடத்தி வந்தது.
இந்த கொரோனா தொற்று காரணமாக லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். சமீப காலமாக கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில், தற்போது சீனா, அமேரிக்கா போன்ற வெளிநாடுகளில் பிஎப் 7 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது.
இந்த நிலையில், சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் 89 புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, மார்ச் 27, 2020 க்குப் பிறகு மிகக் குறைவாக தொற்று பதிவாகியுள்ளது. அதே நேரத்தில் செயலில் உள்ள வழக்குகள் 2,035 ஆகக் குறைந்துள்ளன. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.