தல 61 குறித்து வெளியான வெறித்தனமான தகவல்.!

நேர்கொண்ட பார்வை, வலிமை, திரைப்படங்களைதொடர்ந்து அஜித்தின் 61-வது படத்தையும் எச்.வினோத் இயக்குவதாகவும், போனி கபூர் தயாரிப்பதாகவும் தகவல்.
நடிகர் அஜித் தற்போது இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து வருகிறார். படத்திற்கு இசையமையாளர் யுவன் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று சாதனைகளை படைத்தது வருகிறது.
இந்த நிலையில், தற்போது தல அஜித்தின் 61-வது படத்தைப்பற்றி தகவல் கசிந்துள்ளது. அது என்னவென்றால், நேர்கொண்ட பார்வை, வலிமை, திரைப்படங்களை தொடர்ந்து அஜித்தின் 61-வது படத்தையும் எச்.வினோத் இயக்குவதாகவும், தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கவுள்ளதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025