எல்லா விரதங்களை போல மகா சிவராத்திரிக்கும் சில விதிமுறைகள் உள்ளது. இந்த விரதம் மற்ற விரதங்களை போல கிடையாது கொஞ்சம் கடுமையான விரதமாக தான் நம்ம இருக்க வேண்டும். மற்ற விரதங்களில் வழிபாட்டில் ஆரம்பித்து விருந்தில் முடியும். ஆனால் சிவராத்திரி அப்படி அல்ல மனிதர்களுக்கு மிகவும் முக்கியமான இரண்டு விஷயம் உணவு , நல்ல தூக்கம் இவை இரண்டையும் ஒதுக்கி வைத்து சிவனுக்காக நாம் விரதம் இருப்பது தான் இந்த நாளின் முக்கிய நோக்கமாகும்.
உணவையும் , உறக்கத்தையும் ஒதிக்கினால் புலன்கள் தானாகவே அடங்கும் அப்போது இறைவன் அருள் பெறமுடியும் நினைத்த காரியம் முடியும் இது தான் மகா சிவராத்திரி விரதத்தின் பின்னணி காரணமாகும். மகா சிவராத்திரி விரத நெறிமுறைகள் என்ன என்பதை பற்றி பார்க்கலாம்.
மகா சிவராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் அதற்கு முந்தைய நாளான நேற்று திரியோதசி திதி அன்று ஒருபொழுது மட்டும் உணவு அருந்தி சிவநாமம் ஜெபித்து சிவனை நினைத்து மந்திரம் ஓதியயோ அல்லது புராணங்களைப் படித்து பின்னர் நாம் உறங்கவேண்டும். மறுநாளான சதுர்த்தசி இன்று உபவாசமிருந்து தூக்கம் கலைந்து இரவில் நான்கு ஜாமங்களிலும் சிவபெருமானை பூஜித்து வழிபட்டு அதற்கு அடுத்த நாளான (நாளை) காலை ஏழைகளுக்கும் அன்னதானம் செய்து பின்னர் உணவருந்தி விரதம் முடிக்கவேண்டும் .
சிவராத்திரி இன்று அதிகாலையில் குளித்து திருநீறு தரித்துக் கொண்டு சிவாலயம் சென்று ஈசனை தரிசித்து விரதத்தை தொடக்கவும். விரதம் இருப்பவர்கள் முடிந்தவரை மூன்று வேளையும் உணவு உண்ணாமல் விரதம் இருந்தாள் அது ரொம்பவே நல்லது. முடியாதவர்கள் தங்கள் உடல்நிலைக்கு ஏற்றவாறு பால் , பழம் மட்டுமே சாப்பிட்டு கூட நம்ம விரதம் இருக்கலாம்.
அப்படி இல்லையேன்றால் சர்க்கரைவள்ளிக் கிழங்கை உப்பு இல்லாமல் வேக வைத்து சாப்பிடலாம் இதுவும் இல்லையேன்றால் சத்து மாவை வெல்லத்துடன் கலந்து ஒரு வேளை மட்டும் நம்ம சாப்பிடலாம். நாள் முழுவதும் ” ஓம் நமச்சிவாயா அல்லது சிவாயநம” எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்தவாறு இருக்க வேண்டும்.
வேலைக்கு செல்பவர்கள் சிவனை நினைத்து கொண்டு வேலையை செய்யவேண்டும். வீட்டில் இருந்து விரதம் இருப்பவர்கள் அன்று மதியம் , மாலை மற்றும் இரவு குளிக்க வேண்டும். வேலை முடித்து வருபவர்கள் மாலை மற்றும் இரவு குளிக்க வேண்டும். அன்று இரவு கோவிலில் நடக்க இருக்கும் நான்கு ஜாம பூஜைக்கு உண்டான நல்லெண்ணெய் , பஞ்சாமிருதம், நெய் , பால் ,தயிர் ,தேன் கரும்புச்சாறு, இளநீர், பழரசம் சந்தனம், வில்வஇலை மற்றும் இதர புஷ்பங்களை அவரவர் முடிந்தவாறு மாலையில் கோவிலுக்கு சென்று கொடுத்து வரலாம்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…