நான் 4 அல்ல, 40 திருமணம் கூட செய்து கொள்வேன் – நடிகை வனிதா..!

Published by
Sharmi

நான் 4 அல்ல, 40 திருமணம் கூட செய்து கொள்வேன் என்று நடிகை வனிதா தெரிவித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமாகியவர் வனிதா. இதன் பிறகு முன்னணி சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கு கொண்டு அந்நிகழ்ச்சியின் முதலிடத்தை வெற்றிபெற்றார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் நடந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார்.

இதில் மற்றவர்களுடன் ஒப்பிடுவதை தாங்க முடியாமல் அந்நிகழ்ச்சியின் நடுவரான ரம்யா கிருஷ்ணனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவ்விடத்தை விட்டு வெளியேறுகிறார். இதன் முழுப்பகுதி வரும் ஞாயிற்றுகிழமை வெளியாக உள்ளது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்துகொண்டார். பல பிரச்சனைகளுக்கு பின்னர் அவரை விட்டு பிரிந்துவிட்டார்.

மேலும், தற்போது இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனுடன்  மாலையும் கழுத்துமாக இருக்க கூடிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ஏற்கனவே ஜோதிடர் ஒருவர் வனிதாவின் ஜாதகத்தில் இன்னும் திருமண யோகம் இருப்பதாக தெரிவித்திருந்தார். அதிலும் எஸ் என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் பெயர் உள்ள நபருடன் நடக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வனிதா பவர் ஸ்டார் உடன் மணக்கோலத்தில் உள்ள புகைப்படத்தை வெளியிட்டது சமூக வலைத்தளத்தில் பேசும்பொருளாக மாறியுள்ளது. நான்காவது திருமணம் செய்துகொண்டாரா? இல்லை ஏதும் படப்பிடிப்புகளுக்காக எடுக்கப்பட்டதா? என்று தெரியாமல் பலரும் அவர்களது கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை வனிதா செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘இந்த புகைப்படம் பவர்ஸ்டார் சீனிவாசன் இயக்கத்தில் நடிக்கவுள்ள பிக்கப் டிராப் படத்தின் படப்பிடிப்புக்காக எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.  மேலும் நான் 4 அல்ல, 40 திருமணங்கள் கூட செய்துகொள்வேன். அது என்  உரிமை. பெண்களுக்கு அவரவர் வாழ்க்கையில் தனிப்பட்ட சுதந்திரம் தேவை.

அது கிடைக்காமல் போகும்போது தான் பெண் தற்கொலைகள் நிகழ்கிறது. தனக்கு இப்போதைக்கு திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லை’ என்றும் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து பவர்ஸ்டார் சீனிவாசன் கூறியிருப்பதாவது, ‘இந்த சமூகத்தில் 90 சதவீதம் பெண்கள் எந்தவொரு விஷயத்தையும் வெளியில் சொல்லாமல் வாழ்கிறார்கள்.  உண்மையில் நடிகை வனிதா ஒரு இரும்பு பெண்மணி’ என்று கூறியுள்ளார்.

Published by
Sharmi

Recent Posts

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

4 hours ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

5 hours ago

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

6 hours ago

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

7 hours ago

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

8 hours ago

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

8 hours ago