50 ஓவர் உலகக் கோப்பை போட்டி.. இந்தியாவில் நடைபெறும் ஐசிசி அறிவிப்பு ..!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களை மிரட்டி வருகிறது.இந்நிலையில், அனைத்து விதமான விளையாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டும் சில போட்டிகள் ரசிகர்கள்

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களை மிரட்டி வருகிறது.இந்நிலையில், அனைத்து விதமான விளையாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டும் சில போட்டிகள் ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் வருகிறது.

ஆஸ்திரேலியாவில் வருகின்ற அக்டோபர் 18-ஆம் தேதி முதல் நவம்பர் 15-ஆம் தேதி வரை 7-வது 20 ஓவர் உலக கோப்பை போட்டி  நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், ஆஸ்திரேலியாவில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளதால், 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடத்துவது சாத்தியல்லை என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

இந்நிலையில், கடந்த 2 மாதங்களில் மூன்று முறை ஐ.சி.சி. ஆலோசனை நடத்தியது. அப்போது, உலக கோப்பை போட்டி குறித்து அவசரம் காட்டமாட்டோம் என்று கூறியது. இதைத்தொடர்ந்து இன்று  மீண்டும் ஐ.சி.சி.யின் நிர்வாக குழு உறுப்பினர்கள் காணொளி மூலம் ஆலோசனை நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டம் முடித்த பிறகு உலக கோப்பை போட்டிகள் ஒத்திவைப்பதாக ஐ.சி.சி. அறிவித்தது. இந்த ஆண்டு நடைப்பெற இருந்த போட்டிகளை வருகின்ற 2021 ஆம் ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் டி-20 உலகக்கோப்பை தொடர் நடைபெறும் எனவும் இறுதிப் போட்டி வருகின்ற 2021 நவம்பர் 14-ஆம் தேதி அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி வருகின்ற 2023 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் நவம்பர் வரை இந்தியாவில் நடைபெறும் என அறிவித்துள்ளது. 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியின் இறுதிப் போட்டி2023-ஆம் ஆண்டு  நவம்பர் 26 தேதி நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.