ஒலிம்பிக் குத்துச்சண்டை :இந்தியாவுக்கு மற்றொரு பதக்கம் பெற்று கொடுத்த லவ்லினா...!

Indian boxer Lovlina wins bronze at Tokyo Olympic boxing

டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை காலிறுதி போட்டியில்,64-69 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் லவ்லினா,சீன தைபேயின் சின்-சென் நியென்னை கடந்த ஜூலை 30 ஆம் தேதி எதிர்கொண்டார். இப்போட்டியில்,சீன வீராங்கனையை 4-1 என்ற கணக்கில் லவ்லினா தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

இந்நிலையில்,இன்று நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை 69 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா,துருக்கி வீராங்கனை புஷானேஸ் கர்மெனஸியை எதிர்கொண்டார்.இப்போட்டியில் 0-5 என்ற கணக்கில் லவ்லினா தோற்றதால்,வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

முன்னதாக,டோக்கியோ ஒலிம்பிக் பளுதூக்குதலில் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றார்.இதனையடுத்து,ஒலிம்பிக் பேட்மிண்டனில் பிவி சிந்து வெண்கலப்பதக்கம் வென்றார்.இந்நிலையில்,இந்தியாவுக்கு 3 வது பதக்கத்தை பெற்று கொடுத்து லவ்லினா பெருமை சேர்த்துள்ளார்.