அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து விலகும் ஜெஃப் பெசோஸ் – காரணம் என்ன தெரியுமா?

Published by
Rebekal

அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜெஃப் பெசோஸ் அவர்கள் தற்போது தலைமை செயல் அதிகாரி பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய நிறுவனமாக விளங்கும் அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி வகித்து வந்தவர் தான் ஜெஃப் பெசோஸ். 1994 ஆம் ஆண்டு பெசோஸால் நிறுவப்பட்டது தான் அமேசான் நிறுவனம். 27 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த அமேசான் நிறுவனம் இவ்வளவு பெரிய நிறுவனமாக வளர்ந்து 13 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை கொடுத்துள்ள நிலையில், தான் இந்த நிர்வாகத்தின் தலைமை அதிகாரி எனும் பதவியிலிருந்து விலகப்போவதாக பெசோஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். இவரது இந்த அறிவிப்பு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தான் முற்றிலுமாக விலகப் போவதில்லை எனவும், தலைமை நிர்வாகி எனும் பதவியிலிருந்து விலகி தொடர்ந்து நிர்வாகத் தலைவராக இருக்க போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வளவு நன்றாக இயங்கி வரக்கூடிய அமேசான் நிறுவனத்தின் வெற்றிக்கு தூணாக இருந்த இவர் ஏன் திடீரென இந்த பதவியில் இருந்து விலகுகிறார் என அனைவருக்குமே ஆச்சரியமாக இருக்கும். அதற்கு காரணம் என்ன என்பது குறித்தும் அவர் கூறியுள்ளார். அதாவது அமேசானின் புதிய பரிமாணத்திற்க்கான ஆரம்ப முயற்சிகள் சிலவற்றில் அவர் கவனம் செலுத்தப் போவதாகவும், இதனால்தான் தான் அந்த முடிவை எடுத்துள்ளதாகவும் ஒரு கடிதத்தின் மூலம் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அமேசான் என்றால் என்ன என்றே தெரியாமல் இருந்தவர்களுக்கு தற்பொழுது மிகவும் நன்றாகவே தெரிந்து விட்டது. இது தான் தனது வெற்றி எனவும் தெரிவித்துள்ளார். இதுவரை இவர் பதவி வகித்து வந்த தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் 52 வயதான ஆண்டி ஜாஸி எனும் அமேசான் நிறுவனத்தின் வெப் சர்வீசஸ் தலைவர் இனி பதவி ஏற்று நடத்துவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

6 hours ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

7 hours ago

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

8 hours ago

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

9 hours ago

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

10 hours ago

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

10 hours ago