லெபனான் குண்டுவெடிப்பு – அரசை கண்டித்து வெடிக்கும் போராட்டம்!

லெபனான் பிரதமராகிய ஹசன் பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
லெபனான் நாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பதாக பெய்ரூட் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரேட் என்னும் வேதிப்பொருளால் நிகழ்ந்த பயங்கரமான குண்டுவெடிப்பில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த இடிபாடுகளில் சிக்கிய பலரை தேடும் பணியும் நடைபெற்று வருகிறது. இது குறித்து பேசிய அந்நாட்டின் பிரதமர் மிகவும் கலங்கி ஹிரோஷிமா நாகசாகி நிகழ்வுடன் ஒப்பிட்டு இதுவரை இப்படி ஒரு நிகழ்வை நான் பார்த்ததில்லை என்று வருத்தப்பட்டு பேசியிருந்தார்.
இந்த குண்டு வெடிப்பு சம்பவம் லெபனான் அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டின் பிரதமராகிய ஹசன் பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஏற்கனவே இரு அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது. பிரதமர் ஹாசன் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும், அவர்களின் படத்தை தூக்கில் தொங்கவிட்ட படியும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். மக்கள் போராட்டத்தை கலைக்க காவல்துறையினர் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைக்க முயற்சித்துள்ளனர். இந்த செயல் மேலும் நெருக்கடி ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.