சிறப்பு பிரிவினருக்கு மருத்துவ கலந்தாய்வு; சென்னையில் இன்று தொடக்கம்.!

மருத்துவப்படிப்புகளுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு, சென்னையில் கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு பன்னோக்கு மருத்துவமனையில் இன்று தொடங்குகிறது.

medical counselling mbbs

மருத்துவப்படிப்புகளுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு, சென்னையில் கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு பன்னோக்கு மருத்துவமனையில் இன்று தொடங்குகிறது.

நடப்பு 2023-24 ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை மருத்துவப்படிப்புகளில் சேர பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த ஜூலை 25 ஆம் தேதி தொடங்கிய நிலையில், சிறப்பு பிரிவினருக்கு இன்று கலந்தாய்வு தொடங்குகிறது.

விளையாட்டுப்பிரிவு, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வாரிசுகள் பிரிவு, 7.5% அரசுப்பள்ளி மாணவர்களும் இந்த சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில் பங்கேற்கின்றனர்.