நடிகர் பார்த்திபன் அவர்களால் இயக்கப்பட்ட ஒத்த செருப்பு திரைப்படம் புதுச்சேரி அரசால் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு விருது பெற உள்ளது.
இயக்குனர் பார்த்திபன் அவர்களால் இயக்கப்பட்டு அவராலேயே நடிக்கப்பட்ட ஒத்த செருப்பு எனும் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இருப்பினும், இந்த படத்துக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று அடிக்கடி பார்த்திபன் கூறியுள்ளார். இருப்பினும் அதன்பின் பல்வேறு இடங்களில் இந்த படத்திற்கான அங்கீகாரத்தை அவர் பெற்றுள்ள நிலையில், தற்போது புதுச்சேரி அரசு சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படக் கூடிய திரைப்பட விழா இந்த ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி அலையன்ஸ் பிரான்சேஸ் அரங்கில் நடத்தப்பட உள்ளது.
மத்திய அரசு ஆண்டுதோறும் சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்து திரைப்பட விழாவை நடத்துவது போல சிறந்த பிராந்திய மொழி புகைப்படத்தை தேர்வு செய்து புதுவை அரசு வழங்கிய வரும் நிலையில் 2019ஆம் ஆண்டு வெளிவந்த ஒத்த செருப்பு திரைப்படம் சிறந்த திரைப்படமாக தற்பொழுது தேர்வு செய்யப்பட்டுள்ளது. வருகிற டிசம்பர் 15ஆம் தேதி பார்த்திபனுக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவர்கள் சங்கரதாஸ் சுவாமிகள் பெயரிலான விருது வழங்கப்படவுள்ளது.விருதுகள் மட்டுமல்லாமல், அத்துடன் ஒரு லட்சம் ரொக்கப் பரிசும் இதில் கொடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…