மன்மத லீலை படப்பிடிப்பிலிருந்து வெளியான புகைப்படங்கள்.!

மாநாடு திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்ததாக நடிகர் அசோக் செல்வனை வைத்து மன்மத லீலை என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில், சம்யுக்தா ஹெக்டே, ஸ்ம்ருதி வெங்கட், ரியா சுமன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
இந்த படத்தில் பிரேம்ஜி நடிக்காததால் ஏற்கனவே பிரேம்ஜிக்கு வெங்கட் பிரபு அளித்த வாக்குப்படி இந்த படத்திற்கு பிரேம்ஜி இசையமைக்கிறார். இப்படத்தை இந்த படத்தை ராக்போர்ட் முருகானந்தம் தயாரிக்கிறார்.
படத்திலிருந்து வெளியான க்லிம்பஸ் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025