மலையாள திரையுலகில் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமாகிய நடிகர் விஜய் பாபு மீது இளம்பெண் ஒருவர் கேரளாவில் பாலியல் புகார் கொடுத்துள்ளார். எர்ணாகுளம் தெற்கு போலீசார் அந்த பெண் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
விஜய் பாபு மலையாளத்தில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். மேலும், பிலிப்ஸ் அண்ட் தி மங்கி பென் எனும் படத்திற்க்காக இவர் கேரளா மாநிலத்தின் திரைப்பட விருதையும் வென்றுள்ளார். ஃபிரைடே ஃபிலிம் ஹவுஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தையும் விஜய் பாபு நடத்தி வருகிறார்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி விஜய் பாபு மீது இளம்பெண் பாலியல் புகார் அளித்துள்ளார். அதில் கொச்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரக்கூடிய விஜய்பாபு தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி அவர் இது போன்று தவறாக நடந்து கொண்டதாகவும் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
புகார் அளித்த பெண் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. இந்நிலையில், விஜய் பாபு மீதான இந்த புகாரின் அடிப்படையில் விஜய் பாபுவுக்கு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோழிக்கோடு : கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் நேற்று அவசர சிகிச்சை பிரிவு…
கோவா : நேற்று (மே 2) கோவாவில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் , பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
சென்னை : தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று (மே 3)…
கோவா : ஷிர்கானில் ஆண்டுதோறும் நடைபெறும் தேவி லாராய் ஜாத்ராவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர்…
பெங்களூர் : இந்த சீசனின் 52வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும்…